News

சிம்லா ஒப்பந்தம் போன்று கச்சத் தீவு ஒப்பந்தம் ரத்து செய்யவேண்டும்..? மோடிக்கு கோரிக்கை

Follow Us

குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி. வேலுமணி என்று வரிசையாக பாராட்டு தெரிவிக்கிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு ஒரு வாழ்த்து கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். அதேபோன்று அத்தனை அ.தி.மு.க. தலைவர்களும் அஜித்துக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர் அஜித் அதோடு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவுல கருணாநிதியை மேடையில் வைத்துக்கொண்டே எரிச்சலூட்டியவர். அதனால், அஜித்தைக் கொண்டாடுவது தி.மு.க.வுக்குப் பிடிக்காது என்பதாலே எடப்பாடி பழனிசாமி அஜித்துக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

இளைஞர் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், நாம் தமிழர் வாக்குகள் மற்றும் தி.மு.க.வுக்கு வரும் வாக்குகள் மட்டுமே விஜய்க்கு விழும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்குப் போடுகிறார். எனவே, அஜித் ஆதரவு வாக்குகள் மட்டும் அ.தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று கணக்கு போடுகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு அஜித் நன்றி சொல்வார் என்றும் அதை வைத்து பெரிய அரசியல் விளையாட்டு நடத்தலாம் என்றும் அ.தி.மு.க.வினர் பிளான் போடுகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link