Share via:

அண்ணாமலை இல்லேன்னா தமிழக பா.ஜ.க.வுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்
என்று அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் கடுமையான முயற்சிகள்
மேற்கொள்கிறார்கள். அதிமுகவை எதிமுக என்று அதாவது எடப்பாடி திமுக என்று எழுதி கூட்டணியை
உடைக்கும் வேலையை கட்சிக்குள்ளேயே செய்கிறார்கள். இவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்தால்
கட்சிக்குள் முணுமுணுப்பு எழும் என்பதால் நேரடியாக அமித்ஷாவிடம் பட்டியல் ஒப்படைத்திருக்கிறார்
நயினார் நாகேந்திரன்.
கடந்த 28ம் தேதி மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷாவை பகல் 1 மணியளவில் சந்தித்து, 30 நிமிடங்கள் பேசினார் நயினார் நாகேந்திரன்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி வலுப்படுத்தும் முயற்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும்
வகையில் சிலர் தொடர்ந்து செயல்படுவதை ஆதாரபூர்வமாக புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும்
சந்தித்து இது குறித்துப் பேசினார்.
இதையடுத்து நேற்றைய தினம் அதாவது
29ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து, தமிழக அரசியல் சூழ்நிலை,
பாஜக-அதிமுக கூட்டணி, மற்றும் எதிர்கால தேர்தல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமருடன் சந்திப்பைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்து,
கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பை அடுத்து மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா, வருகிற மே மாதம் 3ந் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. பா.ஜ.க. நிர்வாகிகளை கட்டுப்படுத்தும் வகையில் நேரடியாக எச்சரிக்கை
செய்வதற்கே இந்த வருகை என்று சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வில் நயினார் நாகேந்திரன் கொடி
பறக்கத் தொடங்கிவிட்டது.
இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள்
என்ன செய்வது என்று புரியாமல் தவித்துவருகிறார்கள்.