News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம்’ என்று ராகுல்காந்தி வாக்குறுதி கொடுத்தார். ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இருந்த பா.ஜ.க. இப்போது, ’மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது. இது ராகுல் காந்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொண்டாடுகிறார்கள். அதேநேரம், இதில் பா.ஜ.க. நிறைய உள்ளடி வேலைகள் செய்யும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

இது குறித்து பேசும் காங்கிரஸ்கட்சியினர், ‘’ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எனும் அறிவிப்பு 100% பீகார் தேர்தலுக்கான தூண்டிலே தவிர வேறேதும் இல்லை. துல்லியமான ஜாதிவாரிக் கணக்கு தெரிந்து விட்டால் இப்போதுள்ள பார்ப்பன ஆதிக்கம் அடுத்த 30 ஆண்டுகளில் முழுவதுமாக ஒழிந்துவிடும் என்பதை சங்பரிவார்கள் நன்கு அறிவார்கள். எனவே எக்காரணம் கொண்டும் இதை நடக்க விடவே மாட்டார்கள்!

காங்கிரஸ் ஆட்சியின்போதும் சென்சஸ் பட்டியலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அதை வெளியிடாமல் தடுத்து நிறுத்திய சக்திகள் இப்போதும் பல்வேறு கட்சிகளிலும், நீதிமன்றம் போன்ற அமைப்புகளிலும் மேலதிக அதிகாரத்துடன் உள்ளனர். சென்சஸ் தொடங்கும் போதே, “என்னென்ன சாதிகள், எத்தனை சாதிகள், எத்தனை தொகுப்புகள்” என்றெல்லாம் பிரச்சனைகளை தொடக்கி நீதிமன்றம் கொண்டு சென்று ஸ்டே வாங்கி விடுவார்கள்.

மாநில அரசிடம் தற்போது உள்ள சாதிவாரிப் பட்டியலை மட்டுமே கொண்டு அந்தந்த மாநிலத்துக்குள் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே இதை 80% துல்லியத்துடனாவது எடுக்க முடியும். 6. நேற்றைய அறிவிப்பினால் நடந்த ஒரே நல்ல விஷயம், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இத்தனை காலமாக கடுமையாக பேசி சங்கிகள் தற்போது தாங்கள் கக்கிய விஷத்தை தாங்களே விழுங்கிக் கொண்டிருக்கின்றனர்! அதைக் காண ஜாலியாகதான் உள்ளது. மண்டல் கமிசன் அறிக்கையை வி.பி.சிங் அமல்படுத்தியபோது அதை எதிர்த்து வடமாநிலங்களையே பற்றி எரிய வைத்த சக்திகள் இப்போது நாடு முழுவதும் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் வேளையில் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக பேசிய, போராடிய ராகுல் காந்தியின் துணிச்சல்தான் மிகவும் பாராட்டத்தக்கது’’ என்கிறார்கள்.

ஜாதிக்கணக்கெடுப்பை கிண்டல் செய்த மோடி இப்போது அறிவிப்பு செய்திருப்பது பற்றி வெளியாகியிருக்கும் கார்ட்டூன் வைரலாகிவருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link