Share via:
எல்லோரும் எதிர்பார்த்தபடியே தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பிரேமலதா
தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சியின் இளைஞர்
அணி செயலாளராகச் நியமிக்கப்பட்டுள்ளார். கழகத் துணைச் செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ்
கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்குப் பிறகு விஜயபிரபாகரன் பேசிய விவகாரங்கள் எல்லாமே
காமெடி வைரலாகிறது. ‘’ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த பதவியை எனக்கு தொண்டர்களே
கொடுத்தார்கள். அண்ணியாரின் தியாகத்தை எல்லோரும் அறிவார்கள். அரசியலில் முதன் முதலாக
பேண்ட் அணிந்தது நான். என்னை காப்பியடித்தே எல்லோரும் பேண்ட் அணிகிறார்கள்’’ என்று
ஒரே பேட்டியில் எக்கச்சக்க கன்டன்ட் கொடுத்திருக்கிறார்.
பெத்த அம்மாவையே அண்ணியார் என்று உறவு சொல்லி அழைக்கும் முதல்வன்
விஜயபிரபாகரன் என்று அவரது தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள். அதோடு, விஜயபிரபாகரன் தமிழக
முதல்வராக வேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றும் குரல் கொடுக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜயபிரபாகரனின் பேண்ட் விவகாரம் சமூகவலைதளங்களில்
சிரிப்பாய் சிரிக்கிறது. ‘’தமிழ்நாடு அரசியலில் யார் முதலில் பேண்ட் போட்டது என்றெல்லாம்
யாரும் க்ளெயிம் செய்யவே முடியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே பேண்ட் போட்டுக் கொண்டு
அரசியல் கூட்டங்களுக்கு வந்ததுண்டு. திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்த இன்றைய முதல்வர்
1996க்குப் பிறகுதான் வேட்டி அணியத் தொடங்கினார். கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை என்பதை
அரசியல்வாதிகளுக்கான அடையாளமாக உருவாக்கியவர் அவர்தான். துணை முதல்வர், கருப்பு பேண்ட்டுக்கு
பதிலாக ஜீன்ஸ் அணிகிறார். 1991ல் திமுக எம்.எல்.ஏ.வான பரிதி இளம்வழுதி கருப்பு பேண்ட்
அணிந்து சட்டமன்றத்துக்கு வரத் தொடங்கினார்.
வைகோ அவர்களும் பேண்ட் அணிந்து வருவது உண்டு. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி,
திருமாவளவன், அன்புமணி, கமல்ஹாசன் என்று பட்டியல் போய்க்கொண்டே இருக்கும். விஜய பிரபாகரன்
போன்ற தத்திகளுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.