Share via:
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா உறுதி செய்துவிட்டார்
என்றாலும், கட்சி மேலிடத்திலும் ஒற்றுமை நிலவுவதாகத் தெரியவில்லை. அதனாலே வெளிநாடுகளுக்கு
அனுப்பும் எம்.பி.க்கள் குழுவில் திமு.க.விற்கு மட்டும் இடம் கிடைத்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளின்
நியாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொல்லும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில்
தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இப்போது கூட்டணியில் இருக்கும் அதிமுகவில் சி.வி. சண்முகம், தம்பி
துரை ஆகிய அனுபவசாலிகள் எம்.பி.க்களாக இருந்தாலும் அவர்களை பா.ஜ.க. தவிர்த்துவிட்டது.
இந்த நிலையில் இதுவரை கனிமொழி குறித்து தொடர்ந்து அவதூறு கூறிவந்த பா.ஜ.க.வினர் இந்த
நடவடிக்கையை அதிர்ச்சியுடன் பார்த்துவருகிறார்கள்.
இதுகுறித்து தி.மு.க.வினர், ‘’டெல்லியில் கனிமொழி தனி ராஜ்ஜியம்
நடத்திவருகிறார். டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரை விட எல்லோரும் கனிமொழியை அதிகம் மதிக்கிறார்கள்.
அதனாலே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதிலென்ன தப்பு?’’ என்று கேள்வி கேட்கிறார்கள்.
அப்புறம் கூட்டணிக் கட்சிக்கு என்ன மரியாதை என்பதற்குத்தான் ஒரு
பதிலும் இல்லை.