News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு இருப்பதையடுத்து மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரலாற்றிலேயே முதன்முறையாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் தொடங்கி பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி நீர் என்பது பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், அதாவது 80 சதவீத விவசாய நிலங்கள் சிந்து நதி நீரை தான் நம்பியிருக்கின்றன. கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய நகரங்கள் சிந்து நதியில் இருந்து நேரடியாக நீரை பெறுகின்றன. தர்பேலா, மங்க்லா ஆகிய ஹைட்ரோ பவர் பிளாண்ட்களும் தடையற்ற நீர் சேவையை சிந்து நதியில் இருந்து தான் பெற்று வருகின்றன.

சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகளில் நீரோட்டம் குறைந்துவிடும். உணவு உற்பத்தியை அடியோடு பாதிக்கப்படும். எனவே உணவிற்கு பெரிய திண்டாட்டம் ஏற்படும்குடிநீர் விநியோகம் தடை படும். நீர் மின்சார உற்பத்தி நின்றுவிடும். இதை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், வீடுகள் இருளில் மூழ்கும். எனவே பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மேலு  அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி (Integrated Check Post Attari) உடனடியாக மூடப்படுகிறது. செல்லத் தகுந்தான அனுமதியுடன் இந்த வழியாகக் கடந்து சென்றவர்கள், 01 மே 2025க்குள் இதே வழியாக இந்தியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், SAARC விசா விலக்கு திட்டத்தின் (SAARC Visa Exemption Scheme – SVES) கீழ் இந்தியா செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இதன் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். தற்போது இந்தியாவில் SVES விசாவுடன் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டுச் வெளியேற வேண்டும்.

 பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள இந்திய இராணுவம்/கடற்படை/விமானப்படையின் ஆலோசகர்கள் ‘Persona Non Grata’ என அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும். அதேபோன்று, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்திய இராணுவ/கடற்படை/விமானப்படை ஆலோசகர்களும் திரும்பப் பெறப்படுவர். இந்த ஆலோசகர் பணியிடங்கள் இரு தூதரகங்களிலிருந்தும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்த ஆலோசகர்களுடன் பணியாற்றும் ஐந்து ஆதரவு பணியாளர்களும் இரு தூதரகங்களிலிருந்தும் திரும்ப அழைக்கப்படுவர். இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது..

உலக நாடுகள் தலையிட்டு பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், அதிரடி அட்டாக் மேற்கொள்ளவும் திட்டமிடப்படுகிறது. மதவாதப் பிரச்னையாக இந்த விஷயம் மாறுவதைக் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link