News

எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டரான நயினார்… இனி இரட்டைக் குழல் துப்பாக்கி..?

Follow Us

நீதிமன்றத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது வரிசையாக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பின் வாங்கினால் அடுத்தடுத்து ஆபத்துகள் வரும் என்பதால் செந்தில்பாலாஜிக்காக நீதிமன்றத்துடன் சட்டப் போராட்டம் நடத்துவதற்கு ஸ்டாலின் தயாராவதாக சொல்லப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில், ’’செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக இல்லை என சிறப்பு மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்று அதன் பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி கொண்டீர்கள். சாட்சிகளை கூண்டிற்கு கூட வரவிடாமல் அவர் தடுக்கிறார் அமைச்சர் பதவியா ஜாமினா என்பதை திங்கட்கிழமைக்குள் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று செக் வைத்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொல்வது குறித்து முக்கியத் தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘’செந்தில் பாலாஜியை போல 21வது சட்டபிரிவின் கீழ் ஜாமினில் விடபட்டவர் ஹேமந்த் சோரன் அவர் முதலமைச்சராக உள்ளார்.இன்னொருவர் அஜித் பவார் அவர் துணை முதலமைச்சர் எனவே செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டாம், இதை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்’’ என்று சட்டத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே நீதிமன்றத்தில் இதற்கு ஒரு விளக்கம் கொடுக்க தி.மு.க. தயாராகிறது.

இதையடுத்து தி.மு.க.வினர், ‘’அண்ணன் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் சாட்சிகள் கலைக்கப்படுவார்கள் என்று நீதிபதிகள் சொல்வார்களேயானால் அது மற்ற வழக்குகளுக்கும் பொருந்தும் தானே!? IPC, CrPC க்கு ஒரு நடைமுறையும் PMLA க்கு வேறு நடைமுறையா இருக்க முடியும்!!!? இதில் மெரிட் என்றால் என்ன!? நீதிபதிகளின் கேள்வியின் படி பார்த்தால் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அசாம் மாநில பாஜக முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா சாட்சிகளை கலைக்கமாட்டாரா!? மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜீத் பவார் சாட்சிகளை கலைக்கமாட்டாரா!?? பாஜவினராக இருந்தால் ஊழலிருந்து விலக்கு பெற தனி சட்டம் எதுவும் இருக்கிறதா?’’ என்று கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள்.

திங்கள் கிழமை பெரிய வேட்டை இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link