Share via:

தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்றால் விஜய் நேரடியாக எடப்பாடி பழனிசாமியுடன்
கூட்டு சேர்ந்திருக்க வேண்டும், இதில் விஜய் பெரிய தப்பு செய்து கோட்டை விட்டுவிட்டார்
என்று பழம்பெரும் அரசியல்வாதியின் கருத்தை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவு செய்து
வரவேற்பு கொடுத்திருக்கிறார்.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தது தவறு என்று சிலர் கருத்து
கூறிவரும் நிலையில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழகத்தில் தேர்தல் கூட்டணி என்பது
என்ன என்பது பற்றிய தலைசிறந்த அரசியல்வாதி பழ கருப்பையா தெளிவாக விளக்கியிருப்பதாகக்
கூறியிருக்கிறார்.
இந்த் கூட்டணி குறித்து பழ.கருப்பையா, ‘’தேர்தல் கூட்டணி என்பது
வாழ்நாள் கமிட்மென்ட் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு சேர்ந்து இருப்பது. தி.மு.க.வை
அகற்ற வேண்டும் என்றால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கலாம். அதேநேரம் கொள்கைகளை விட்டுத்தரக்
கூடாது.
எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர் ஆதரவில் உறுதியாக இருக்கிறார். வக்பு
சட்டத்திற்கு எதிராக வாக்கு செலுத்துவிட்டு அமித் ஷாவுடன் கூட்டணி வைக்கிறார். கொள்கைகளை
விட்டுத்தராமல் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கிறார், இதில்
தவறு இல்லை. இந்த தேர்தலில் தி.மு.க.வை அகற்றவில்லை என்றால் தி.மு.க.வின் மன்னராட்சி
நிரந்தரமாகிவிடும்.
இதில் விஜய் தவறு செய்துவிட்டார். கட்சி ஆரம்பித்தவுடனே பாதிக்குப்
பாதி சீட் கேட்டது மிகப்பெரிய தவறு. எடப்பாடி பழனிசாமியுடன் இனியாவது வந்து சேர்ந்து
தி.மு.க.வை அகற்றுவதில் பங்கேற்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.