Share via:

மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, அந்த கட்சியை உடைப்பது, அதன் பிறகு மாநிலக் கட்சியின் அதிருப்தியாளர்களைக் கொண்டு ஆட்சி அமைப்பது, கடைசியில் அந்த மாநிலக் கட்சியை உருத் தெரியாமல் அழிப்பது என்பது தான் பா.ஜ.க.வின் நீண்ட கால செயல்திட்டமாக இருந்து வருகிறது.
கர்நாடகம், மகாராஷ்டிரா, பீகார் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. இந்த வித்தையைக் காட்டி ஜெயித்திருக்கிறது. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். அதனாலே தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி என்று கூறினார். ஆனால், எப்படியோ ஆசை வார்த்தைகளைக் கூறியோ அல்லது மிரட்டியோ அவரை கூட்டணிக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.
அதேபோன்று அ.தி.மு.க.வுக்குள் செங்கோட்டையன் போன்ற அதிருப்தியாளர்களையும் உருவாக்கிவிட்டனர். எந்த நேரத்தில் செங்கோட்டையன் கையில் கட்சியைக் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சேர்க்கும் நாடகமும் நடக்கலாம் என்றே தெரிகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆபத்துகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கிறார். அதோடு, தனது கட்சிக்காரர்கள் யாரும் கூட்டணி குறித்து விமர்சனம் செய்யக்கூடாது என்றும் கட்டளை போடுகிறார்.
எடப்பாடி தெரிஞ்சுதான் தெரிஞ்சு செய்கிறாரா அல்லது கண்ணை மூடிக்கொண்டு நடக்கிறாரா என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.