Share via:

சிறுபான்மையினர் வாக்குகள் இதுவரை திமுகவுக்கு மட்டுமே சென்றன.
இந்த முறை கிறிஸ்தவர் என்பதாலும் இஸ்லாமிய ஆதரவாளர் என்பதால் சிறுபான்மையினர் வாக்குகள்
அப்படியே விஜய்க்குக் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள். இந்நிலையில்,
விஜய்யை இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்று இஸ்லாமிய அமைப்பு வெளியிட்டிருக்கும்
அறிவிப்பு அவரது ஓட்டு வங்கிக்கு ஆபத்தாக மாறுகிறது.
இஸ்லாமிய மதகுரு மௌலானா
ஷாபுதீன் ரஸ்வி வெளியிட்டிருக்கும் கடிதத்தில், ’தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள்
விஜய்யிடமிருந்து விலகி இருக்கவும், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், அவரை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். குடிகாரர்கள சூதாட்டக்காரர்களைஇப்தார் விருந்துக்கு கூட்டி வந்ததால்
இஸ்லாமியர்கள் விஜயை எந்த விழாவிற்கும் அழைக்க வேண்டாம் தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள்
விஜய்யிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். இவருக்குப் போடும் ஓட்டுகள் இஸ்லாமியர்களுக்கு
எதிராக செயல்படும்’ என்று காரணம் கூறியிருக்கிறார்.
இந்த கடிதத்தைக் கண்டு விஜய்
ஆதரவாளர்கள் பதறினாலும் இப்போது யார் இந்த ஷாபுதீன் ரஸ்வி என்று ஆதாரத்தை வெளியிட்டு
அலற விடுகிறார்கள். அதாவது, ‘இந்திய முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை
வரவேற்க வேண்டும்…’ என்று சொன்னவர், வக்ஃப் திருத்த சட்டத்தையும் ஆதரித்து ‘இது நாடாளுமன்றத்தில்
நிறைவேற வேண்டும் இன்ஷா அல்லாஹ்’ என்று சொன்னவர். முஸ்லிம்களை சாதி அடிப்படையில் பிரித்தாளும்
ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்திட்டமான ‘பஸ்மந்தா முஸ்லிம்’ என்ற செயல்திட்டத்திற்கு செயல்வடிவம்
கொடுக்கும் நயவஞ்சகர். எனவே, இவரது அறிக்கையை தமிழக முஸ்லீம்கள் ஒருபோதும் மதிக்கவே
மாட்டார்கள்.
சிறுபான்மையினர் வாக்குகளை விஜய்யிடம் இருந்து திருடுவதற்கு இப்படி
பலர் வெளியே வரலாம். ஆனால், அவர்கள் ஓட்டு எங்களுக்குத்தான். ஜெயிக்கிறோம், ஆட்சியைப்
பிடிக்கிறோம்’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்.