News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

முருகப்பெருமானை முப்பாட்டன் என்று கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருக்கு நெருக்கமான கட்சிப் பிரமுகர்கலை எல்லாம் உறவு சொல்லி அழைப்பதே வழக்கம். அந்த வகையில் புதிய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை மாமா என்று வாய்நிறையக் கூப்பிட்டிருப்பது நாம் தமிழர் தம்பிகளை தத்தளிக்க வைத்திருக்கிறது.

நாம் தமிழர் சீமான், ‘’பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பிற்குரிய மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்’’ என்று கூறியிருக்கிறார். எதிர்க் கட்சி என்றாலும் பாராட்டு தெரிவிப்பது அரசியல் மாண்பு என்றே எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மாமா என்று சொந்தம் கொண்டாடுவது தான் அவரது கட்சியினரை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கியிருக்கிறது.

நயினார் நாகேந்திரனை மாமா என்று அழைத்திருக்கும் சீமான் குறித்து உடன்பிறப்புகள், ‘’சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை சின்னம்மா என்று சொன்னார். எடப்பாடி பழனிசாமியை சித்தப்பா என்று கூறினார். இப்போது நயினார் நாகேந்திரனை மாமா என்று அழைத்திருக்கிறார். இது எந்த வகையிலான உறவு, அவர் எப்படி மாமாவாகிறார் என்று வெளிப்படையாகச் சொல்வது நல்லது.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே வெளிப்படையாக சீமான் வேட்பாளர் அறிவித்திருக்கிறார். அதேபோல் தனித்துப் போட்டி என்றும் சொல்லிவருகிறார். ஆனால், அவரை எப்படியாவது பா.ஜ.க. கூட்டணிக்குள் இணைத்துவிட வேண்டும் என்பது நயினாரின் திட்டம். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. அதனாலே மாமா என்று சீமான் அழைத்திருக்கிறார். அடுத்து அமித்ஷாவை பெரியப்பா என்பார், மோடியை தாத்தா என்பார். நல்ல நகைச்சுவை நடிகராக மாறுகிறார் சீமான்’’ என்கிறார்கள்.

ஆனால் சீமான் ஆதரவாளர்கள், ‘’தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது தான் எங்களுடைய குறிக்கோள். ஆனால், அதிமுக + பாஜக + நாதக கூட்டணி உருவாகுமா என்று சொல்ல முடியாது. அப்படி அமைந்தால் நல்லது. ஏனென்றால் தனித்து நின்று நடிகர் விஜய்யை விட குறைவான வாக்கு வாங்கினால் அவமானமாகிவிடும். சங்கி என்றால் நண்பன் என்பது போல் மாமா என்றால் கூட்டணிக்கு உழைப்பவர் என்றே அர்த்தம்’’ என்கிறார்கள்.

இந்த கூட்டணியில் நடிகை விஜயலக்ஷ்மியையும் சேர்த்துக்கொண்டால் சூப்பரா இருக்கும் என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link