Share via:
சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து கூட்டணியை
உறுதி செய்வார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதனாலே அமித்ஷாவை சந்திக்கக் காத்திருந்த
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோருடன் சந்திப்பு நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி
சந்திப்பு இல்லை என்றதும் தோல்வி முகத்துடன் திரும்பிப் போகிறார் அமித்ஷா.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்வு
செய்து நாளை அறிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்குத் தேர்தல்
நடப்பதாகவும் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இது தமிழிசை செளந்திரராஜன், சரத்குமாரை சமாளிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆளுநராக இருப்பவர் எந்த கட்சியிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது
என்பதற்கு ஏற்ப தமிழிசை பாஜகவில் இருந்து விலகினார். ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா
செய்து பின்னர் தற்போது தான் மீண்டும் உறுப்பினராக இணைந்துள்ளார். எனவே தமிழிசை செளந்தரராஜன்
ஜூனியராக மாறிவிட்டார். அதேபோல் சரத்குமார் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரும் கட்சியில்
சேர்ந்து 10 வருடங்கள் ஆகவில்லை என்பதால் அவரும் அவுட் ஆகிறார்.
இந்த வகையில் ஜாதி ஃபார்முலா வழியில் நயினார் நாகேந்திரன் தேர்வு
செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அடாவது நாடார் இனத்திலிருந்து தமிழிசை செளந்தரராஜன்,
பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பட்டியலினத்
தலைவராக எல்.முருகன் இருந்துவிட்டார்.. சி பி
ராதாகிருஷ்ணன் அண்ணாமலை போன்ற கவுண்டர் சமூக தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு
விட்டது,
எனவே முக்குலத்தோர் மற்றும்
வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் இப்போது முக்குலத்தோர் சமூகத்தைச்
சார்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுகிறார். யாரும் போட்டியிட அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்றும், இவரை தேர்வு செய்தே அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.