Share via:
அண்ணாமலையின் திறமையைப் பாராட்டி தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும்
என்று மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை அடுத்து, ‘அண்ணாமலைக்கு பிரதமர் பதவி
அல்லது உள்துறை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று அவரது ஆதரவாளர்கள்
சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘’தமிழகத்தில் திமுக
விற்கு சாவுமணி அடிக்கவேண்டும் என்றால் வலுவான கூட்டணி தேவை. அதனாலே நம் தலைவர் அண்ணாமலையை
மாற்றியிருக்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராகத் தொடர்ந்தால் கடுமையான பணிச்சுமையை
சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால் தி.மு.க.வை பற்றி சிந்திக்க முடியாமல் போகிறது.
நமது டார்கெட் 2026 அல்ல 2030ல் நமது மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள்
தான் தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் எனவே அனைத்து நிர்வாகிகளும் அண்ணாமலை
இல்லையே நாங்களும் சென்று விடுகிறோம் என்று புலம்ப வேண்டாம் அண்ணாமலை கட்சியை விட்டு
செல்லவில்லை அவர் அடுத்த பொறுப்பிற்கு செல்கிறார்.
இன்னொரு திட்டமும் தலைமைக்கு இருக்கிறது. மோடிக்கு 75 வயது ஆகிவிட்டதால்
அடுத்த தேர்தலில் புதிய பிரதமரை முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு நமது தலைவரை
தயார்படுத்த நினைக்கிறார்கள். அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அவர் அமித்ஷாவை
பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படியொரு சூழல் உருவானால் அண்ணாமலை உள்துறை
அமைச்சராகிவிடுவார். எனவே, நமது அண்ணாமலை நம்மை விட்டு தூர எங்கும் செல்லவில்லை மாற்றுக்
கட்சிக்கு செல்லவில்லை அடுத்த உயர் பதவிக்கு செல்கிறார் எனவே சந்தோஷமாக வழி அனுப்பி
வைப்போம்..’’ என்று பக்கம் பக்கமாக எழுதி வருகிறார்கள்.
என்ன எழுதினாலும், ‘உள்ளே அழுகுறேன், வெளியே சிரிக்கிறேன்’ என்று
அவர்கள் குமுறுவது நன்றாகவே தெரிகிறது. புதிய தலைவர் இந்த டீமை கவனிப்பாரா அல்லது கழட்டிவிடுவாரா..?