News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மத்திய பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமியை மதிக்காமல் தனி ஒருவனாக சட்டசபையில் நின்று பேசிய விவகாரம் அ.தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் மீனவர் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், ‘அந்த தியாகி யாரு?’ என்ற பதாகைகள் ஏந்தி சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ரெய்டு குறித்து பேச வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பதாகைகள் மற்றும் அணிந்திருக்கும் பேட்ஜை கழட்டி கீழே வைத்து விட்டு, அவை நடவடிக்கைகளில் அமைதி காக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார்.

ஆனால் யாரும் ஏற்கவில்லை. தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.  இதன் காரணமாக பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளியேறி சட்டமன்ற நுழைவுவாயிலில் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

அதேசமயம் சபாநாயகர் அறிவுறுத்தலின் பேரில் செங்கோட்டையன் பேட்ஜை கழட்டி வைத்துவிட்டார். தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு வருகிறார். செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார் கோபியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாகப் பேசினார்.

பாஜக தலைவர்களை சந்திப்பதும், அதிமுக கொறடா உத்தரவை மதிக்காமல் இருப்பதும் என செங்கோட்டையன் தனி ஆவர்த்தனம் செய்வது எல்லை மீறி போகிறது. இதற்கு மேலும் அவரை கட்சியில் வைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைக்கு ஆபத்து. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கட்சியினர் கெஞ்சுகிறார்கள். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருக்கிறார். அ.தி.மு.க.வில் பெரும் பூகம்பம் நடக்கப்போவதன் அறிகுறி என்றே சொல்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link