News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக அரசு இரண்டாவது முறை அனுப்பிய 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்தது தவறு – கவர்னருக்கு என தன்னிப்பட்ட அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அனுப்பிவைக்கும் தீர்மானங்களை அப்படியே நிறுத்தி வைத்து ஆட்டம் காட்டிய ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதனை ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்தது.

இதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த தீர்ப்பில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய வேண்டும். இந்த சட்டப்பிரிவின் கீழ் சுயேட்சையாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியுமா?

இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டப்படி தவறா? என முடிவு செய்ய வேண்டும். மசோதாக்களை தான் நிறுத்தி வைக்காமல் குடியரசு தலைவர் முடிவு செய்ய ஆளுநர் அனுப்ப முடியுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும் தான் ஆளுநர் செயல்பட முடியுமா? அல்லது சுயேட்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். கூடிய விரைவில் என்ற வாக்கியத்திற்கு என்ன பொருள்? மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிரானதாக உள்ளது.

உச்ச நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், புரிந்துணர்வோடு நியாயமான முடிவை ஆளுநர் எடுப்பார் என்ற எண்ணத்துடன் தான் அரசியல் சட்டத்தை நிர்ணயித்தவர்கள் விதி வகுத்தனர். ஆளுநர் ஒருமுறை மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டால் அதன் தொடர் நடவடிக்கையை அவர் தான் மேற்கொள்ள வேண்டும். ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. ஆளுநர் ஒருமுறை மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டால் அதன் தொடர் நடவடிக்கையை அவர் தான் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம்’’ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. என்ன செய்யப்போகிறார் ரவி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link