Share via:
பொய் பேசுவதற்கும் அரைகுறை தகவல்கள் பேசுவதற்கும் சீமான், அண்ணாமலை
என இருவரும் கொஞ்சமும் கூச்சப்பட மாட்டார்கள். இன்னைக்கு ஒரு முக்கியமான ஃபைல் ரிலீஸ்
பண்றேங்கன்னா என்று சொல்லும் அண்ணாமலை அடுத்த நொடியே அதை மறந்துவிடுவார். அதேபோல் சீமானும்
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவைப்பார்.
சமீபத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவில் 22 தி.மு.க. உறுப்பினர்கள்
மட்டுமே எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். மீதம் இருப்பவர்கள் எங்கே போனார்கள்
என்று ஆவேசம் காட்டினார். இதை வைத்து உடன்பிறப்புகள் சீமானை செமையாக கலாய்த்துவருகிறார்கள்.
தமிழ் நாட்டில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் மொத்தமே
22 பேர் தான். மீதமுள்ள 17 எம்.பி.க்களும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள்
என்று கூட்டணிக் கட்சிகள். இது கூட தெரியாமல் பேசுவதால் தான் கவுன்சிலர் சீட் கூட வெல்ல
முடியவில்லை என்று கிண்டல் செய்கிறார்கள்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். மேடையில் அண்ணாமலையும் சீமானும் கலந்துகொண்டதும்
இருவரும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டதையும் பார்த்து இரண்டு கட்சியினரும் புல்லரித்துப்
போயிருக்கிறர்கள்.
தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்திப் பிடித்திருக்கிறார்
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர், ‘”உலகம் முழுக்கச் செல்லும்
பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும், உலகின் முதல் மொழியான தமிழ் மொழி, எங்கள் இந்தியாவில்
இருப்பது பெருமை எனக் கூறுகிறார். செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி
உயர்த்திப் பிடிக்கிறார்.” என்று பாராட்டினார்.
இதையடுத்து அண்ணாமலை, ’’எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம்
இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன்.
அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். நான் சீமானுக்காக தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து
கொண்டு இருப்பதற்கான காரணம். இன்றைக்கு அரசியல் களத்தில், நேர்மை குறைந்து இருக்கிறது.
அது இருக்க கூடிய சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி
அமைந்துள்ளது. சீமானுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒரு
அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட,
ஒரு போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக தான் சீமானை பார்த்து கொண்டு இருக்கிறேன். காரணம்
அவரது கொள்கை, அந்த கொள்கையில் அவர் எடுத்து இருக்கும் உறுதி, அதற்காக எதை இழந்தாலும்
பரவாயில்லை என்று தைரியமாக போர்க் களத்தில் போராடும் மாண்பு. இது தமிழக அரசியலில் சீமானை
தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது…’’ என்று பாராட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘’இப்போது அண்ணாமலையும் சீமானும்
மிகப்பெரும் சக்தியாகத் திகழ்கிறார்கள். பாஜக தலைவர் பதவி தரவில்லை என்றால் அண்ணாமலை
தனிக்கட்சித் தொடங்கலாம். இரண்டு பேரும் கூட்டணி சேர்ந்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடித்துவிடலாம்.
ஆளுக்கு இரண்டரை வருடம் தமிழக முதல்வராக இருக்கலாம்’’ என்கிறார்கள்.
இவர்களுடைய உலகமே தனி.