News

அமித்ஷாவை சந்திக்கிறாரா சைதை துரைசாமி..? அ.தி.மு.க.வில் களேபரம்

Follow Us

டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாகப் பேசிய நீதிபதிகள் திடீரென மாற்றப்பட்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அமலாக்கத்துறையின் டாஸ்மாக் ரெய்டு விவகாரத்தை வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு தாக்கல் செய்திருக்கிறது.

அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் விலகிய நிலையில், எஸ்.எம்.சுப்ரமணியம், ராஜசேகர் அமர்வு விசாரிக்கிறது. இவர்களை மாற்றக்கோரி மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க கூடாது, வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி முறையிட்டு இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை அவசரமாக பட்டியலிடக் கோரி, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி இன்று இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் பிரிவு 139A இன் கீழ் (ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கும்) அரசு அணுகியுள்ளதாக அவர் கூறினார். அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிராக அரசு தாக்கல் செய்த முந்தைய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுப்பப்பட்டுள்ளன என்றும், இந்த இடமாற்ற விஷயத்தையும் அதனுடன் பட்டியலிட வேண்டும் என்றும் சவுத்ரி கூறினார்.

இந்த அமலாக்கத்துறை சோதனைகள் அரசியல் நோக்கில் நடத்தப்பட்டவை என்பதால், இந்த வழக்கை மும்பை, கொல்கத்தா அல்லது டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கை மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. இது உச்ச நீதிமன்றத்தில் ஏற்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் தமிழக அரசின் போராட்டம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வேறு மாநிலத்துக்குப் போனால் வழக்கு சரியாக நடக்கும் என்ற ஸ்டாலின் ஆசை நிறைவேற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link