Share via:
சைவம், வைணவம் என்பது தமிழர்களின் சமயப் பண்பாட்டுப் பிரிவுகள்.
அதனை பாலியல் தொழிலாளியின் கோட் வேர்டு என்று கலகலப்பாகப் பேசினார். இந்த விவகாரத்தில்
இந்துக்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்திய அமைச்சரை பதவியில் இருந்து எடுக்க வேண்டும்
என்று கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
பொதுமேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’ஒரு நண்பர் விலைமாதுவிடம்
(அமைச்சர் பொன்முடியே அந்த நண்பர் என்று சொல்லப்படுவது வேறு விவகாரம்) போனபோது, ‘நீங்க
சைவமா இல்ல வைணவமா?’ என்று கேட்டிருக்கிறார். அதன் அர்த்தம் புரியவில்லை என்றதும்,
சைவம்னா படுக்க வச்சு செய்யறது, வைணவம் என்றால் நிற்க வைத்துச் செய்வது என்பது போன்று
பேசினார்.
இதையடுத்து கடுமையான எதிர்விளைவுகள் வந்துள்ளன. அமைச்சர் பதவியை
விட்டு பொன்முடியை உடனடியாக பதவி விலகச் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன.
தி.மு.க. எம்.பி.யான கனிமொழியும், ‘எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட
கொச்சையான பேச்சு கண்டிக்கத்தக்கது’ என்று எக்ஸ் தளத்தில் பதிவு போட்டிருக்கிறார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியினர், ‘’பொன்முடி பெண்களை இழிவுப்படுத்தி
பேசியதாக எல்லாரும் கண்டிக்கிறார்கள். அவர் திராவிட இயக்கத்தை இப்படித்தான் ஆபாசமாக
,வக்கிரமாக ,பாலியல் கதைகளை பேசி வளர்த்தோம் என்ற உண்மையைச் சொல்லியுள்ளார். திராவிடம்
என்றாலே ஆபாசம்தானே ! ஈவெரா என்பவரே அந்த காலத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்திதான்’’ என்று
பெரியாரையும் வம்புக்கு இழுக்கிறார்கள்.
இந்த நிலையில் ’கழக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி
கட்டம் கட்டப்பட்டுள்ளார். அதேநேரம், அமைச்சர் பதவியில் தொடர்கிறார். பா.ம.க.வில் பஞ்சாயத்து
நடக்கும்போது பொன்முடியைத் தூக்குவது சரிப்படாது என்பதால் எப்போதும் போல் ஸ்டாலின்
அமைதி காக்கிறாராம்.