Share via:

திருச்சி பா.ஜ.க. மாநாட்டில் எக்கச்சக்க கூட்டத்தைக் காட்டிவிட்டார்கள்.
இதையடுத்து, எம்.ஜி.ஆருக்குப் பிறகு அண்ணாமலைக்குத் தான் இத்தனை பெரிய கூட்டம் கூடியிருக்கிறது
என்று எக்கச்சக்க பில்டப் கொடுத்தார்கள். அதேநேரம், அண்ணாமலை பேசிய நேரத்தில் கலைந்துசென்ற
தொண்டர்களை புகைப்படம் எடுத்த விவகாரம் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ’’ பள்ளிக்கல்வி
துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அகில உலக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின்
உண்மையான தலைவராக உள்ளார். பாடல் வெளியீட்டு விழா, உதயநிதி ஸ்டாலின் பின்னால் செல்வது
போக மீத நேரமிருந்தால் கல்வி துறையை கவனிக்கிறார்.
அமைச்சர்கள் பெயர்களை பார்த்தீர்களானால், அமைச்சர் காந்தி… பெயர்
தான் காந்தி ஆனால் 1990 கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாசில் சிறைக்கு சென்றவா். அடுத்து
அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே ஒரு வரும் சிறைக்கு சென்றார். மீண்டும் விரைவில்
5 அல்லது பத்து ஆண்டுகள் சிறைக்கு செல்வார். பிறகு அறநிலையத்துறை அமைச்சர் சென்னையில்
ரவுடி ஷீட்டிர் ஆவார். ரவுடி பட்டியலில் இருந்தவர் தற்போது அமைச்சர், நாடு விளங்குமா?.
அடுத்தது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடையவர்
ரகுபதி. அவர் தற்போது சட்டத்துறை அமைச்சர் இந்த கூட்டு களவாணிகள் எல்லாம் சேர்ந்து நமது
குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றனா். இவர்கள் அனைவரும் சேர்ந்து
தமிழ்நாடு கல்வி கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனா். அதை ஏற்க
முடியுமா? என அண்ணாமலை சரமாரியாக விளாசி தள்ளினார். மேலும் பேசுகையில் தேசிய கல்வி
கொள்கைக்கு ஆதரவாக 18 நாட்களில் இதுவரை 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்’’ என்று
முழங்கினார்.
இதுகுறித்துப் பேசும் தி.மு.க்.அ.வினர், ‘’’தமிழ்நாட்டில் பாஜக
ஆட்சிக்கு வந்தால்.. கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்போம். தனியார்
பள்ளிகளுக்கு அனுமதி இல்லை மதுக்கடைகளை எல்லாம் மூடுவோம்…’’ என்றெல்லாம் பேசுகிறார்.
இவற்றை எல்லாம் பாஜக ஆளும் மாநிலத்தில் செய்தாச்சா? இல்லைல்ல.. முதலில் அங்கே செய்யட்டும்.
புகைப்படம் எடுத்தவர்களை மிரட்டி அடிக்கும் அண்ணாமலை நேர்மையான தலைவரா..? தமிழ்நாட்டில்
ஆட்சிக்கு வர முடியாது என்பதால் இப்படி தைரியமாகப் பேசுகிறார்’’ என்று கிண்டலடிக்கிறார்கள்.