News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கட்சிக்குள் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாகப் பேசிவரும் நிலையில், செங்கோட்டையன் மேற்கொள்ளும் அமைதிப் புரட்சி பெரும் கலவரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பின்னே ஒவ்வொரு தலைவராக வெளியே வருவார்கள் என்று சொல்லப்படும் நிலையில், இன்று செங்கோட்டையனிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதுகுறித்து பேசும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், ‘’அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவை எதிர்க்க முடியும் என்பதில் டெல்லி உறுதியாக உள்ளது. அதேசமயம் பலம் வாய்ந்த அதிமுக அல்லது ஒருங்கிணைந்த அதிமுகவால் தான் வெற்றி சாத்தியமாகும் என்பதில் உறுதியாக இருக்கிறது. சசிகலாவுக்குப் பதவி தரவில்லை என்றாலும் பரவாயில்லை, பன்னீருக்கும் டிடிவி தினகரனுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

முந்தைய நிலை அதாவது எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பன்னீர்செல்வம் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் மாற வேண்டும் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே, இப்போது செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளராகவும், பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளராகவும் மாற்றி தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க.வுக்கு முறையீடு செய்வதற்கு திட்டமிடுகிறார்கள்.

தான் சீனியர் என்றாலும் எடப்பாடி பழனிசாமி எதற்கும் தன்னிடம் கலந்து பேசுவதில்லை என்ற வருத்தத்தில் இருந்த செங்கோட்டையன் இந்த அசைன்மெண்ட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். தன்னால் கட்சி ஒற்றுமை பெற வேண்டும் இல்லையென்றால் இரட்டை இலை முடங்க வேண்டும் என்று நினைக்கிறார். இரண்டு பக்கமும் பிடிவாதம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் சட்டமன்றத்தில் கேபி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். சரிக்கட்ட முடியும் என்று தோன்றவில்லை. எடப்பாடி பழனிசாமி இறங்கிவரவில்லை என்றால் கட்சி நிச்சயம் உடையும். சில முக்கிய தலைவர்கள் அடுத்து செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுப்பார்கள்’’ என்று கூறுகிறார்கள்.

எடப்பாடி ஆதரவாளர்களோ, ‘’எடப்பாடி பழனிசாமியை விட செங்கோட்டையன் அண்ணாமலையுடன் அனுசரித்து போவார் என்பதாலே இப்படி ஒரு முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அண்ணாமலை இதற்கு காரணம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். அண்ணாமலையின் கணிப்பை உடைத்துவிட்டு கட்சியைக் காப்பாற்றுவார் எடப்பாடி பழனிசாமி’’ என்கிறார்கள். மோதல் ஆரம்பமாகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link