Share via:
சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை
இல்லா தீர்மானம் என்று சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்காமல்
பா.ஜ.க. வெளியேறியது, பா.ம.க.வும் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்தின் மூலம் பன்னீர்
மற்றும் செங்கோட்டையன் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது.
தமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்துகொள்கிறார்
என்று அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம்
நீக்கப்பட்ட பின்னரும், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் அவரை தொடர வைக்கிறார் என்றும்,
உதயகுமாரை எதிர்கட்சித் துணைத் தலைவராக ஏற்று எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் அமர வைக்கவேண்டும்
என்றும் தொடர்ந்து சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பின்னரே
ஓபிஎஸ் இருக்கை மாற்றப்பட்டது. அதேபோல் அவை நடைபெறும் போது எதிர்கட்சி உறுப்பினர்கள்
அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பும் போது அமைச்சர் அளிக்க வேண்டிய பதிலை முந்திக்கொண்டு
சபாநாயகர் அளிக்கிறார் என்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாக பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறார் என்றும் அதிமுக
சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், அப்பாவுவை சபாநாயகர்
பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார்
ஜனவரி மாதம் கொடுத்தார். இந்த தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அ.தி.மு.க. தீர்மானத்திற்கு போதிய ஆதரவு இல்லை என்பதால் இந்த தீர்மானம் தோல்வி அடையும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், இந்த தீர்மானத்திற்கு எதிராக பன்னீர், செங்கோட்டையன் ஆகியோர் நடந்துகொண்டால் அவர்கள் மீது கட்சிக் கொறடா மூலம் எம்.எல்.ஏ பறிப்புக்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு ஆதரவாக பன்னீரும் ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, எடப்பாடி பழனிசாமியின் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது