Share via:
தேமுதிக பொதுச் செயலாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் இன்று
தன்னுடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழ்த்து
வைரலாகிவருகிறது.
மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் பக்கம் இப்போதும் பிரேமலதாவால் பராமரிக்கப்பட்டு
வருகிறது. ஆகவே அந்த தளத்தில் விஜயகாந்த் அவர் தனது மனைவியை வாழ்த்தி பதிவிட்டது போல்
ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அதில், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக்
கைவிடுவதுமில்லை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தே.மு.தி.க.வினர் வேகவேகமாக எல்லோருக்கும் பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘’அன்பு சகோதரி, மரியாதைக்குரிய
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்திற்கு
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று சொல்லி சட்டமன்றக் கூட்டணிக்கு நம்பிக்கை
கொடுத்திருக்கிறார்.
அதேநேரம் அண்ணாமலையும் அக்கா பிரேமலதா என்று பாசம் காட்டி பிறந்த
நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். பிரேமலதா மீது தேர்தல் காற்று வீசுகிறது,