Share via:

மத்திய பா.ஜ.க.வினர் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு
இல்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிவருகிறார். உண்மையில் ஸ்டாலின்
ஆட்சியில் தான் நியாயம் கேட்கும் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதாக புகார்கள்
எழுந்துள்ளன.
முன்னதாக கனிமவளங்கள் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர்
ஜகபர் அலி கொலை செய்யப்பட்டார். அதேபோன்று போதைப் பொருட்களுக்கு எதிராகப் போராட்டம்
நடத்திய வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார். இப்போது வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு
எதிராக களமாடிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படி இஸ்லாமியர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
ஜாகிர் உசேன் கொலை குறித்து நாம் தமிழர் சீமான், ‘’முன்னாள் முதல்வர்
ஐயா கருணாநிதியின் தனிப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிக்கே திமுக ஆட்சியில்
பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடானது. சட்டம்-ஒழுங்கு என்பதே திமுக ஆட்சியில் இல்லாமல்
போய்விட்டது என்பதற்கு ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற படுகொலைகளே தக்கச் சான்றாகும்.
ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள், வக்பு சொத்தை மீட்கும் முயற்சியில், தன்னைக் கொலை
செய்ய ஒரு கும்பல் முயல்வதாகக் கடந்த சனவரி மாதமே சமூக வலைதளத்தில் காணொளி மூலம் முதல்வருக்குக்
கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பிறகும், உரியப் பாதுகாப்பு அளிக்காமலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்
மீது உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்காமலும் தமிழ்நாடு காவல்துறை அலட்சியமாக
இருந்ததே ஐயா ஜாகிர் உசேன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முதன்மை காரணமாகும். காவல்துறையைத்
தம்முடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக
ஆட்சியின் எஞ்சியுள்ள ஓராண்டிற்காவது முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி அவர்களைப் படுகொலை
செய்த கொலையாளிகளை விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையைப்
பெற்றுத்தர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
தான் கொலை செய்யபடலாம் என்று வீடியோ வெளியிட்ட உடனே ஜாகிர் உசேன்
கொல்லப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு வழங்காதது யார் தவறு? காவல்துறையை கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் ஸ்டாலின் இது குறியது வாய் திறக்க மாட்டார். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
டிரான்ஸ்ஃபர் செய்வதும் விசாரணை நடத்துவதும் போதும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். நியாயம் கேட்டாலே ஆபத்து எனும் அளவுக்கு ஸ்டாலினின்
இரும்புக்கரங்கள் துருப்பிடித்துக் கிடக்கின்றன. போட்டோ சூட் நடத்துவதை நிறுத்திவிட்டு
ஆட்சியை நடத்துங்கள் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.