Share via:
சமீபத்தில் நாம் தமிழர் சீமானை ஒரு திருமண விழாவில் சந்தித்த அண்ணாமலை,
‘ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்கண்ணா…’ என்று ஆதரவு கொடுத்தார். இந்த விவகாரத்திற்கு எதிரபாராத
பக்கத்தில் இருந்து அண்ணாமலைக்கு செம அடி விழுந்திருக்கிறது.
ஆம், சீமானை மட்டும் பொளந்துகட்டும் நடிகை விஜயலட்சுமி அண்ணாமலைக்கும்
ஒரு கண்டன வீடியோ போட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ‘’அண்ணாமலை உங்கள் மீது எனக்கு
ரொம்ப மரியாதை உள்ளது. உங்கள் நண்பர் சீமான் ஈழத்துக்காக போராடியோ அல்லது கச்சத்தீவை
மீட்கப்போய் இந்த புகாரை வாங்கவில்லை. ஈழத்தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது என்னுடன்
குடும்பம் நடத்திக் கொண்டு என் சொத்துகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டு என்னை பாலியல்
ரீதியாக பயன்படுத்திக் கொண்டு தெருவில் விட்டு போய்விட்டார்.
யாராவது இது குறித்து கேட்டால் என்னை பற்றி எதுவும் தெரியாது என்று
கூறி வருகிறார். திமுகவின் காலகட்டத்தில்தான் காவல்துறை கேட்க வேண்டிய விதத்தில் கேட்ட
பிறகு ஆமாம் விஜயலட்சுமியுடன் நான் குடும்பம் நடத்தினேன் என்று ஒத்துக்கொண்டார். அதை
நீங்கள் பார்க்கவில்லையா அண்ணாமலை? உலகமே காரிதுப்புவது போல் என்னை பாலியல் தொழிலாளி
என்று கூறினாரே என அதை நீங்கள் பார்க்கவில்லையா?
த்ரிஷா விஷயத்தில் மன்சூர் அலிகான் ஏதோ சொல்லிவிட்டார் என்று மொத்த
பாஜகவும் திரிஷாவுக்காக போராடினீர்கள். குஷ்பு பெரிய குரல் கொடுத்தார். சீமான் என்னை
பாலியல் தொழிலாளி என்று கூறிய போது ஏன் உங்கள் கட்சியிலிருந்து யாரும் எனக்காக குரல்
கொடுக்கவில்லை? இந்த விவகாரத்தில் எந்த அரசியலும் இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து
சீமானை ஏதோ ஒரு பெரிய சக்தி காப்பாற்றுவது போல் எனக்கு தோன்றுகிறது…’’ என்று பேசியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் அண்ணாமலை சீமானுக்கு ஆதரவு கொடுப்பாரா..?