Share via:
சென்னை, திருவான்மியூரில் பாஜக நிர்வாகி மகள் ரிசப்ஷனுக்கு வந்த
நாம் தமிழர் கட்சியின் சீமானும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் திடீரென சந்தித்துப்
பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது.
விழாவுக்கு வந்த சீமான் காரில் இருப்பது தெரியவந்ததும் அங்கு வரும்
அண்ணாமலை, ‘’நலமா அண்ணா, ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க அண்ணா” என கை கொடுத்து பேசினார்.
இந்த விவகாரம் வைரலாவதை அடுத்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டதும், ‘’சீமான் அண்ணனுக்கும்
எனக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கு அரசியல் முரண் இருக்கு ஆனாலும் இவ்வளவு நெருக்கடியிலும்
திமுகவை எதிர்த்து மக்களுக்காக போராடுறார்… தி.மு.க.வை எதிர்த்தாலே மோசமா அவங்களை
நடத்த ஆரம்பிச்சுடுவாங்க. இந்த நிலையில் தொடர்ந்து போராடச் சொல்வதற்காகவே அப்படி பேசினேன்’’
என்கிறார் அண்ணாமலை.
இந்த நிலையில் தி.மு.க.வினர், ‘’உங்களை நம்பி நிறைய இன்வெஸ்ட்மெண்ட்
செஞ்சிருக்கோம். அதனால தீவிரமா போராடுங்க என்று நேரடியாகவே அண்ணாமலை சிக்னல் கொடுத்திருக்கிறார்’’
என்று கிண்டலடிக்கிறார்கள்.
அதேநேரம் நாம் தமிழர் கட்சியினர், ‘’இவர்கள் நேரடியாக தர்மேந்திர
பிரதானை சந்தித்தால் அது மரியாதை நிமித்தம். எங்கள் தலைவரை யார் வந்து பார்த்தாலும்,
அது அரசியல் உள்நோக்கமா… 2026 தேர்தலில் தி.மு.க.வை ஓடவிடுவோம்’’ என்கிறார்கள்.