Share via:

கடந்த பிப்ரவரி மாதம் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
‘நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தபோதே உறுதி செய்யப்பட்டது
என்று பேசியிருந்தார். அதற்கு அப்போது அ.தி.மு.க. தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை.’’
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘’தே.மு.தி.க.வுக்கு
ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று நாங்கள் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை வைத்துக் கேட்காதீர்கள்’
என்று பிரேமலதா ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார். இதையடுத்து தே.மு.க.வினர் போர்க்கோலம்
கொண்டுள்ளனர். சமூகவலைதளத்தில் ஆவேசம் காட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து தே.மு.தி.க.வினர், ‘’‘’முதுகுல் குத்துவது சிலருக்கு
புதுசா என்ன? துரோகம் அடியோடு வீழ்த்தப்படும். சட்டசபைக் கூட்டணிக்கு ராமதாஸ் வரவேண்டும்
என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி இப்படி பேசியிருக்கிறார். ஆனாலும் நாங்கள் இந்த துரோகத்தை
சும்மா விட மாட்டோம். மே மாதம் தொடங்கும் “மக்களுடன் கேப்டன் மகன் ” பயணத்தை
ராகுல் காந்தி பயணத்தை விட பெரிதாக்கிக் காட்டுவோம். சின்ன விஜயகாந்த்தைக் களத்தில்
இறக்கி எடப்பாடி பழனிசாமியை ஓட ஓட விரட்டுவோம்
தேர்தல் ஒப்பந்தத்தில் சொல்லாத ஒன்று என பிரேமலதாவுக்கு விபூதி
அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முன்பு ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தபோது
அது எந்த தேர்தல் ஒப்பந்தத்தில் இருந்தது? எடப்பாடி வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால்
பிரேமலதா கடந்த மாதம் இதுகுறித்துப் பேசியபோதே மறுத்திருக்கலாமே? அப்போது அமைதியாக
இருந்துவிட்டு ராமதாஸ் தூது வெற்றி அடைந்த பிறகு எங்களை கழட்டிவிடப் பார்க்கிறார்’’
என்று கொதிக்கிறார்கள்.
அ.தி.மு.க.வினரோ, ‘’நாங்கள் அமைதி காத்தது பெருந்தன்மை. மீண்டும்
மீண்டும் அவர்கள் தரப்பில் பொய்யான தகவல் பரப்பியதாலே உண்மையைச் சொன்னோம்’’ என்கிறார்கள்.
பிரேமலதாவை திரும்பவும் நடுத்தெருவுல விட்றாதீங்கப்பு.