Share via:

கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தயிருந்த சட்டபூர்வமான போராட்டத்துக்கு
கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, போராட இருந்தவர்களை கைது செய்த காவல் துறைக்கு கம்யூனிஸ்ட்
கட்சியினார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு, ஸ்டாலினுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா,
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘’பெண்கள் மற்றும் குழந்தைகள்
மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்திட வேண்டி சென்னையில் 28.02.2025 அன்று கோட்டையை
நோக்கி பேரணி நடத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவு செய்கிறது இதற்காக காவல்துறையிடம்
அனுமதியை முறையாகக் கோருகிறது காவல்துறையும் அனுமதி தருகிறது மாவட்டங்களில் இருந்து
பேரணிக்குப் போவதற்கான ஆயத்தங்கள் நடக்கின்றன.
இந்த நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல்
மாவட்டச் செயலாளர் தோழர் பாப்பாத்தி அவர்களை 27.02.2025 அன்று மதியம் வீட்டுக்காவலில்
எடுக்கிறது காவல்துறை. பேரணியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று எழுதித் தருமாறு அவரை
மேன் ஹேண்டில் செய்கிறது இது எமர்ஜென்சி காலத்தில் இந்திரா அரசாங்கம், ‘திமுகவைவிட்டு
வெளியேறுகிறேன் என்று சொல், உன்னை விடுதலை செய்கிறேன்என்று திமுக தோழர்களை சித்திரவதை
செய்ததை ஒத்திருக்கிறது.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சச்சிதானந்தம் அவர் வீட்டிற்கு
விரைகிறார். அப்போது நடக்கும் உரையாடல் காணொலியில் காவல்துறையினரின் அராஜகம் தெளிவாகத்
தெரிகிறது. 1957 இல் பெரியார் நடத்திய சட்ட எரிப்பு போராட்டத்தில் காவல்துறை இப்படித்தான்
அத்து மீறியது. அது பெரியாருக்கு எதிரான வன்முறை. அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது பெரியாருடைய
பேரன்களின் ஆட்சி. ஒன்று சொல்கிறேன் முதல்வர் அவர்களே சீமான் பெரியாரை வாயால் இழிவு
செய்கிறார் இந்த அரசு இப்படி அராஜகம் செய்வதன் மூலம் செயலால் தந்தையை இழிவு செய்கிறது
இது திராவிடத்தின் கூறுதானா என்பதை தெளிவு செய்யுங்கள்’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர எதிர்ப்பை அடுத்து போராட்டத்துக்கு
அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, என்றாலும் ஸ்டாலின் அரசு யாரைக் கண்டு அஞ்சுகிறது..? ஏன்
இப்படி தடுக்கிறார்கள்? என்பதெல்லாம் உடன்பிறப்புகளையே குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளது.