Share via:

சீமான் வளர்ச்சியைப் பிடிக்காமல் ஸ்டாலின் அரசு வேண்டுமென்றே போலீஸாரை
அனுப்பி மிரட்டிப் பார்க்கிறது என்று ஆவேசப்பட்ட ஆதரவாளர்களை எல்லாம் அதிர வைக்கும்
அளவுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் நாம் தமிழர் சீமான்.
தருமபுரியில் நாம் தமிழர் கட்சியினரின் கலந்தாய்வுக்கூட்டத்துக்குப்
பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், ” இது ஒரே வழக்கு, ஏற்கனவே காவல்துறையிடம்
விளக்கம் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று மாதம் காலம்
அவகாசம் கொடுத்திருக்கு. அதற்குள் இவ்வளவு அவசரம் ஏன் காட்டுகிறார்கள். பெங்களூருக்கு
சென்று நடிகையிடம் விசாரிக்கும் காவல்துறை, என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வா வா என்கிறீர்கள்.
ஓசூரில் இருக்கிற என்னிடம் வந்து விசாரிக்க முடியாதா?
நான் எங்காவது தலைமறைவாகிவிட்டேனா?. வீட்டு கதவில் ஒட்டிவிட்டீர்கள்.
அதோட காவல்துறையோட வேலை முடிஞ்சுபோச்சு. அந்த சம்மனை கிழிக்கிறேன் என்ன வேண்டுமானாலும்
செய்வேன். அந்த சம்மனை கிழிக்காமல், பூஜையறையில் வைத்து பூசையா போட முடியும். எதுக்கு
இவ்வளவு பதட்டம் அடைகிறீர்கள். எங்க வீட்டில் இருப்பவர்களை ஏன் அடிக்கிறீர்கள்?, நான்
ஏற்கனவே இந்த வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறேன். சம்மனை எனக்கு தானே
கொடுக்க வந்தீர்கள். வீட்டுக் கதவில் ஒட்டினால் கதவா விசாரணைக்கு வரும்?.
எங்கள் வீட்டில் கைது செய்தவர்களை நேரடியாக ஸ்டேஷனுக்கு கூட்டி
போகாமல் வேறு எங்கையோ கூட்டிட்டுபோய் அடித்து இருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களும்
மருத்துவமனைக்கு சென்று படுத்துக்கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பிலேயே எனக்கு சம்மன்
அனுப்பியிருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டுக்கு நீலாங்கரை காவல்துறை ஏன் சென்றது. நீங்கள்
வீட்டில் சம்மன் ஒட்டிய தகவல் எனக்கு வந்துவிட்டது. அதன்பிறகு காவல்துறை என் வீட்டுக்கு
செல்ல வேண்டிய தேவை என்ன?.
இந்த வழக்கில் விசாரிச்சு உடனே நீதி நிலைநாட்ட ஆர்வம் காட்டுவது
ஏன். மத்த வழக்குகளில் எல்லாம் நீதி நிலையாட்டியாச்சா?. இது முதலில் என்ன வழக்கு?..
பாலியல் வழக்கு பாலியல் வழக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க. அந்த பொம்பளை யாரு…அவங்க
சொன்ன குற்றமாகிடுமா?. வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு
போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க.
என் கூட மோதி ஜெயிக்க முடியல. என்னைய பார்த்து நீ நடுங்கிட்ட, சமாளிக்க முடியல.
என்ன செய்யனு தெரியாம, அப்பப்போ ஒரு பொம்பளைய கொண்டுவந்து முன்னாடி நிறுத்துறீங்க…’’
என்று பேசினார்.
கற்பழிப்பு பற்றி சீமான் பேசிய நேரத்தில் ஏகப்பட்ட பெண்கள் அமர்ந்திருந்தார்கள்
என்பதும், அத்தனை பேரும் அமைதியாக இருந்தார்கள் என்பதும் தான் வேதனை. என்ன சீமான்,
காலேஜ் பிள்ளையை கற்பழிச்சா மட்டும் தான் கேஸ் போடணுமா..? மேடையில் ஒரு பேச்சு, ஊடக
விவாதத்தில் ஒரு பேச்சு, பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பேச்சு. காவல்நிலையத்தில்
ஒரு பேச்சு, நீதிமன்றத்தில் ஒரு பேச்சு நேரத்துக்குத் தகுந்தாற்போல் பேசுவது தான் அரசியல்
சாணக்கியத்தனமா சீமான்..?