Share via:

அரசியல் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது
கட்டாய நிகழ்வாகிவிட்டது. ஆனால், கட்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே ஜான் ஆரோக்கியசாமியின்
வழிகாட்டுதல் விஜய்க்குத் தேவைப்பட்டது. அதன் பிறகு ஆதவ் அர்ஜூனா வந்தார். இப்போது
பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விஜய்யை
முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்று ஆதவ் பேசினார்.
இந்த நிலையில் ஒரு கட்சிக்கு ஒரு வியூக வகுப்பாளர் இருந்தால் சரியாக
இருக்கும். மூணு பேர் இருந்தால் முக்காடு தான் போட வேண்டும். ஒரே உறையில் எப்படி மூன்று
துப்பாக்கி இருக்க முடியும் என்று விஜய் கட்சியினரே கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள்,
‘’தவெக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை நமது கட்சியின் தலைமை உயர்மட்டக்குழு, பொதுக்குழு, செயற்குழு போன்றவை முடிவெடுக்க
வேண்டும். அதன் பிறகு கூட்டணி யாருடன் என்பதை கட்சி அதிகாரபூர்வமாக தெரிவிக்கலாம்,
செய்தித்தொடர்பாளர் மூலம் தெரிவிக்கலாம். ஆனால், ஒரு வியூக வகுப்பாளர் கூட்டணி பற்றி
பேசினால் என்ன அர்த்தம். விஜய்க்கு சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாதா?’’ என்று கேட்கிறார்கள்.
இதற்கு விஜய் கட்சியின் நிர்வாகிகள், ‘’பிரசாந்த் கிஷோர் சாதாரண
ஆள் இல்லை. அவர் இதுவரை 10 தேர்தல்களில் வியூகம் அமைத்து 9 தேர்தல்களில் வெற்றி தேடிக்
கொடுத்திருக்கிறார். அதனால் பிரசாந்த் கிஷோருக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்.
அவரால் மட்டுமே தி.மு.க.வை வெல்லும் வகையில் திட்டமிட முடியும். அடுத்து சுற்றுப்பயணம், பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து 2026 தேர்தலில் தவெக தன்
பலத்தை நிரூபிக்கும். கொஞ்சம் அமைதியாக இருங்கள்’’ என்கிறார்கள்.
சொந்த மாநிலத்தில் தனக்கு
என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதே தெரியாத ஒருவர் தமிழ்நாட்டில் சாதிப்பார் என்பதெல்லாம்
நம்புற மாதிரியா இருக்கு என்று அவரது கட்சியினரே புலம்புகிறார்கள்.