Share via:

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர்
நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு
இந்த போரில் பல்வேறு வழிகளில் அமெரிக்க உதவியது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இருக்கிறது
என்ற நம்பிக்கையில் தான் ரஷ்யாவுடன் தைரியமாக மோதினார் அதிபர் லெஜன்ஸ்கி.
ஆனால், அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம் உக்ரைனுக்குச் சிக்கலாகிவிட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை
படிப்படியாக நிறுத்தத் தொடங்கினார். அது மட்டுமின்றி பிப்ரவரி 18ஆம் தேதி சவுதி அரேபிய
தலைநகர் ரியாத்தில் உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தை
நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கோ, பிற ஐரோப்பிய நாடுகளுக்கோ
அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில்
புதின் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் லெஜன்ஸ்கியின்
பதவிக்காலம்
கடந்த ஆண்டே முடிவடைந்துவிட்டது. அவர் தலைமையில் இருக்கக்கூடாது என்று கூறினார் டிரம்ப்.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் டிரம்புடன் உக்ரைன் அதிபர் லெஜன்ஸ்கி
பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தாங்கள் சொல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால்
அமெரிக்காவின் ஆதரவை உக்ரைன் இழக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அதோடு, நீ நிறைய பேசிவிட்டாய் இனி நான் பேசுவதைக் கேள். எங்கள் உதவி இல்லை என்றால்
இரண்டே வாரங்களில் போர் முடிந்து போயிருக்கும்’ என்று அவமானப்படுத்தியால் எழுந்து போய்விட்டார்
லெஜன்ஸ்கி.
இப்போது உக்ரைனின் 20 % நிலப்பரப்பு ரஷ்யாவிடம் உள்ளது. அந்த 20 % தான் நாட்டின் 40 % கனிம வளங்கள் இருக்கிறது.
அதனை அமெரிக்காவும் ரஷ்யாவும் பங்கு போடப் போகின்றன. உக்ரைனில் புதிய தலைவராக டிரம்ப்
ஆதரவாளர் வர இருக்கிறார்’’ என்கிறார்கள்.
இந்தியாவுக்கும் இதே பிரச்னை ஏற்படலாம் என்கிறார்கள். டிரம்ப்
மீது இருக்கும் நம்பிக்கையில் சீனா அல்லது அண்டை நாடுகளை பகைத்துக்கொள்வது ஆபத்தாக
மாறிவிடும். டிரம்ப் ஒரு வியாபாரியாகவே பார்ப்பார். அதாஅல் டிரம்பிடம் இருந்து விலகி
நில்லுங்கள் என்று மோடிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள்