Share via:

எடப்பாடி பழனிசாமி டெல்லி விசிட்டிற்குப் பிறகு அ.தி.மு.க.வில்
சலசலப்பு இருக்கிறதோ இல்லையோ, அண்ணாமலை ஆதரவாளர்கள் பதறிப்போய் இருக்கிறார்கள். இந்த
நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை அமித் ஷா சந்திப்பு நடந்திருப்பது முக்கியத் திருப்பமாகப்
பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு என்னைப் போடுங்கள்
என்று ஒரு பெரும் பட்டாளமே அமித் ஷாவுக்கு வரிசையாக ஓலை அனுப்பிவருகிறார்கள். தன்னைத்
தவிர வேறு யாரையும் நியமிக்க மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் நினைத்துவரும்
நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடந்துவருகிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் எனக்கே வாய்ப்பு தர வேண்டும்
என்று நயினார் நாகேந்திரன் ஒற்றைக் காலில் நிற்கிறார். அதேபோல், வானதி சீனிவாசன், கருநாகராஜன்,
சரத்குமார் ஆகியோரும் தலைவர் பதவிக்கு அடி போட்டு வருகிறார்கள். இந்த கூட்டம் பத்தாது
என்று தமிழ் மாநில காங்கிரசைச் சேர்ந்த ஜி.கே.வாசனும் அடி போடுகிறார். எனக்கு தலைவர்
பதவி கொடுத்தால் கட்சியைக் கலைத்துவிட்டு வருகிறேன் என்று நூல் விடுகிறார்.
இப்போது அமித் ஷா விடுத்த அழைப்பின் பேரிலேயே அண்ணாமலை டெல்லிக்குப்
போயிருக்கிறார். ஜெயலலிதா குறித்தும், அதிமுக
தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை காரசாரமாக விமர்சனம் செய்த பட்டியலை எடப்பாடி பழனிசாமி
கொடுத்திருக்கிறார் என்றும், அதன் அடிப்படையிலே விசாரணைக்கு அழைப்பு என்றும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலையை மாத்துனா தமிழகத்தில் பா.ஜ.க. அழிந்தே
போய்விடும் என்று அவரது ஆதரவாளர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். அப்படி தலைவரை
மாற்ற வேண்டும் என்றால் கவர்னர் பதவி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு அண்ணாமலையின்
எதிர்ப்பாளர்கள், ‘தமிழகத்தை அவர் அழிச்சது போதும்ப்பா… திரும்பவும் லண்டனுக்குப் படிக்க
அனுப்புங்க’ என்று சொல்கிறார்கள்.