Share via:

நேரடியாக ஸ்டாலின் பெயரைச் சொல்வதற்கு விஜய் பயப்படுகிறார் என்று
சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்றைய பொதுக்குழு மீட்டிங்கில் ஸ்டாலின் முழுப் பெயரையும்
சொல்லி பேசியிருக்கிறார். அதோடு தி.மு.க.வுக்கு ஒரே எதிரி அது த.வெ.க. என்று பேசினார்.
கூட்டணிக் கணக்கு எதுவும் இல்லை என்பது தெரியவரவே, நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இன்றைய பொதுக்குழுவில் பேசிய விஜய், ‘’மாண்புமிகு மன்னராட்சி முதல்வரே,
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீரப்பா சொன்னால்
போதாது. அதை செயலிலும், ஆட்சியிலும் காட்டணும் முதல்வரே…. இங்கே கதறல் சத்தம் எப்படி
இருக்கிறது.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே! சொல்ல முடியாத அளவிற்கு பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் உங்க ஆட்சிய பத்தி கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு
கோபம் வருது?
ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா… எங்களுடைய மாநாடு
முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். காற்று, மழை, இடியைப் போல எங்களைத் தடுக்கவே
முடியாது. இனி தமிழகத்தில் இரண்டு முனை போட்டி.. அது தவெக vs திமுக இடையே தான்’ என்று
ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
இந்த கூட்டத்தில் சுற்றுப்பயணம் மற்றும் கூட்டணிக் கணக்கு அறிவிக்கப்படும்
என்பது பொய்யாகிப் போனது. அதேநேரம், கூட்டணிக்கு ஆள் இழுக்கும் வேலையை மேடையில் வைத்துக்கொண்டே
பேசினார் ஆதவ் அர்ஜூனா. விசிக தோழர்களே பாஜக இனிமே உள்ள வராது திமுகவை விட்டு வெளியே
வாங்க.. கம்யூனிஸ்ட் தோழர்களே பாஜக இனிமே உள்ள வராது திமுகவை விட்டு வெளியே வாங்க..
ஜவாஹிருல்லா அவர்களே பாஜக இனிமே உள்ள வராது திமுகவை விட்டு வெளியே வாங்க என்று கெஞ்சியதைப்
பார்க்க பரிதாபமாகவே இருக்கிறது.
விஜய் கட்சிக்குச் சிக்கல் தான்.