Share via:

தமிழக சட்டசபையில் நேற்று இஸ்லாமியர் வக்ஃபு சட்டத் திருத்தம்
தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அமித் ஷா உத்தரவுக்குப் பயந்து
சட்டமன்றத்துக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இன்று சட்டமன்றத்தில்
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி
பழனிசாமி செய்தியாளர்களிடம், ‘’உசிலம்பட்டியில் காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள்
வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். போதைப் பொருளை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.
காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி
உள்ளது. இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர். மக்களை பற்றி அரசுக்கு
கவலை இல்லை. எவ்வளவு முக்கிய பிரச்சினையாக இருந்தாலும் துணை முதல்வரின் பதிலுரை தடை
படக் கூடாது என நினைக்கின்றனர்’’ என்று கொந்தளித்திருக்கிறார்.
இது குறித்து பேசும் அ.தி.மு.க.வினர், ‘’தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
சந்தி சிரிக்கிறது. செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து பட்டப்பகலில்
கொலை நடக்கிறது. இது குறித்து விவாதம் நடத்துவதற்கு ஸ்டாலின் அச்சப்படுகிறார். தைரியம்
இருந்தால் நேருக்கு நேராக விவாதம் நடத்தட்டும். அதற்கு பயந்துகொண்டு வெளியே அனுப்பியிருக்கிறார்கள்’’
என்று சவால் விடுகிறார்கள்.
இந்த நிலையில், “நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சித்
தலைவர் அவையில் இருப்பதில்லை.. தொடர்ந்து பார்த்துட்டுதான் இருக்கேன்..” என்று
உதயநிதி பேசியிருக்கிறாஎ. ‘’நீங்கள் குறுக்கீடு இல்லாமல் பேசணும்னு அப்பாவு தானே அவங்கள
ஒரு நாள் முழுக்க சஸ்பெண்ட் பண்ணியிருக்காரு’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.