Share via:
அதிமுகவில் இணைவது சாத்தியமே இல்லை என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு
உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, வரும் தேர்தலுக்குள் ஒரு கட்சியைத் தொடங்கி பாஜகவிடம்
பத்து சீட்டாவது வாங்க வேண்டும் என்று ஆர்வமாக வேலை பார்த்துவருகிறார்.
இது குறித்து பேசும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘’எங்களுக்குத் தொடர்ந்து
அவமானம் நடந்துகொண்டே இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் தனிக்கட்சி அவசியம்
என்பதை உணர்ந்துவிட்டார். ஆகவே, இப்போது எம்.ஜி.ஆர். அதிமுக என்று புதிய கட்சிக்கு
பேர் வைத்திருக்கிறோம்.
இந்த கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துவிட்டோம்.
ஆதோடு கட்சிக்குக் கொடியும் முடிவு செய்துவிட்டோம். அதாவது, கருப்பு, சிவப்பு, நடுவில்
ஒரு வெள்ளை வட்டம் என கொடியை வடிவமைத்து, அந்த வட்டத்தில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,
ஜெயலலிதா ஆகியோரின் படங்களை வைப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணைய முடிவுக்கு பின், அதிகாரப்பூர்வமாக
புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார். கட்சிக்கு பேரும்,
கொடியும் வைத்திருந்தாலும் இன்னமும் தொண்டர்களையே காணவில்லை.