News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் எதிர்ப்பு அறிக்கை கொடுத்தார் நடிகர் விஜய். இதையடுத்து பா.ஜ.க.வினரும் தி.மு.க.வினரும் ஒரே நேரத்தில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் விஜய் குடும்பத்தை நேரடியாகவே பா.ஜ.க. வம்புக்கு இழுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா, `தவெக தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் விஜய் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தாலும் அங்கிருந்து நிறுத்தி அரசுப் பள்ளியில் சேர்க்க தயாரா?’’ என்று கோவை செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேபோல் பா.ஜ.க.வினரும், ‘’ஜோசப் தம்பி என்ன இது…? உன்னோட பையன் மட்டும் ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் படிக்கணும்…. மத்தவங்களோட குழந்தைங்க எல்லாம் ஒரு மொழி மட்டும் தான் கத்துக்கணுமா எந்த ஊரு நியாயம் டா இது’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

தி.மு.க.வினரும், ‘’இந்த நேரத்தில் எதிர்க்க வேண்டியது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை மட்டும்தான். ஆனால், இந்த விஷயத்திலும் தி.மு.க.வை இழுத்து வைத்திருப்பதைப் பார்த்தால் பா.ஜ.க. பி டீம் என்பது உறுதியாகிறது’’ என்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து டென்ஷனாகும் விஜய் கட்சியினர், ‘’தி.மு.க.வை இந்த விவகாரத்தில் விஜய் காரணத்தோடு தான் விமர்சித்தார். சென்ற ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்கள் பி.எம். ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இந்த திட்டத்தில் இணைந்த பஞ்சாப், மாநில அரசு பள்ளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி வெளியேறிவிட்டது. ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டு மக்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட மக்களும் எதிர்க்கிறார்கள்.

ஆனால் சென்ற ஆண்டு (மார்ச் 2024) தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வி துறை செயலாளர் சஞ்சய் குமாருக்கு எழுதிய கடிதம் சர்ச்சை ஆனது. அக்கடிதத்தில் இத்ய் சம்பந்தமாக ஆராய மாநில அளவில் குழு அமைத்ததாகவும், அதனடிப்படையில் இத்திட்டத்தில் இணைய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து செய்தி ஊடகங்களும் செய்தியை வெளியிட்டன. பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “குழு அமைத்ததாலேயே நாங்கள் இத்திட்டத்தை ஏற்கிறோம் என்று அர்த்தம் இல்லை, நாங்கள் எதிர்க்கிறோம்” என்று சமாளித்தார்.

2022 இல் அறம் செய்ய விரும்பு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து வாதாடிய திமுக எம்பி என் ஆர் இளங்கோ ” 42ஆவது திருத்தச் சட்டம்( 1976 எமெர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி பல சட்டங்களை திருத்தினார்) என்பது ஒரு விஷ மரம் அதில் இருந்து வந்த விஷ பழங்கள் தான் தேசிய கல்விக் கொள்கை 2020 ” என்றார். இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருக்கும் திமுக ஏன் சென்ற வருடம் இந்த சர்ச்சையில் சிக்கியது? இன்று வரை அந்த கடிதத்திற்கு பதில் இல்லை’’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.

தி.மு.க.வை விமர்சனம் செய்யும் விஜய் கட்சியினர் பா.ஜ.க.வுக்கு அமைதியாக இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link