Share via:
மோடி அரசின் மும்மொழிக் கொள்கையை விஜய் விமர்சனம் செய்த காரணத்தால்,
விஜய் பள்ளிக்கூட ஆதாரத்தை வெளியிட்டு புதிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் அண்ணாமலை.
விவசாயத்தை அழித்து பள்ளி கட்டியிருப்பதாகவும் பினாமி மூலம் வரி ஏய்ப்பு செய்வதாகவும்
புகார் கூறப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி
நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர்
விஜய் ஒரு சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்று. பதூர் என்ற இடத்தில் அந்த பள்ளி இயங்குகிறது.
அந்த பள்ளியின் பெயர் விஜய் வித்யாஸ்ரம். சி.ஜோசப் விஜய் என்பவர் யார். அவர் புதிதாக
மேலே இருந்து வந்தாரா?. அவர் இடத்தை 35 ஆண்டுகள், 2017ம் ஆண்டில் இருந்து 2052ம் ஆண்டு
வரை, ஒரு அறக்கட்டளைக்கு 35 ஆண்டுக்கு லீஸ் கொடுக்கிறார். அந்த அறக்கட்டளை யார் பெயரில்
பதிவு ஆகியிருக்கிறது என்றால், எஸ்.ஏ.சந்திரசேகர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தக்கூடிய பள்ளிதான் விஜய் வித்யாஸ்ரம்.
அவங்க நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கிறது. அவர்கள் சொந்த குழந்தைகள் பிரெஞ்சு படிக்கிறார்கள்.
இவர்கள் வெளியே வந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் இரண்டு மொழியில்
படிக்க வேண்டும் என்று எந்த லட்சணத்தில் சொல்கிறார்கள்.’’ என்று கடுமையாக விமர்சனம்
வைத்தார்.
இதையடுத்து பா.ஜ.க.வினர், ‘’விவசாய நிலத்தை அழிச்சி ஸ்கூல் கட்டிட்டு,
பரந்தூர் ல விவசாயிகளை ஏமாத்தி நாடகம் போட்டிருக்கிறார் விஜய். அவர் நடத்தும் வித்யாஸ்ரமம்
பள்ளியில் ப்ரிகேஜி வகுப்புக் கட்டணம் ஆண்டுக்கு 45 ஆயிரம். தளபதி என்ற கத்துற கூமுட்டைங்களால்
இந்த பள்ளியின் கேட் பக்கம் கூட போ முடியாது. சாரிடி ஆரம்பித்து அதில் குமாரசாமி என்பவரை
பினாமியாகப் போட்டு வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள். இவர் எப்படி நல்லாட்சி கொடுப்பார்?’’
என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதோடு வுவசாய நிலம் என்பதற்கு ஆதாரம் வெளியிட்டுள்ளனர்.
அதற்கு விஜய் ஆதரவாளர்கள், ‘’விஜய் தங்கச்சி பேர் வித்யா. எஸ்.ஏ.சந்திரசேகரின்
“வித்யா தொண்டு அறக்கட்டளை” மூலம் அவருடைய பிள்ளைகளிள் பெயரில் (விஜய் மற்றும்
வித்யா) நடத்தும் சிபிஎஸ்சி பள்ளி. பரந்தூரில் தரிசாக இருந்த தன்னோட சொந்த நிலத்தை
வித்யா தொண்டு நிறுவனத்திற்கு லீஸிற்கு கொடுத்துள்ளார். இதில் ஏதேனும் தவறு இருந்தால்
நடவடிக்கை எடுங்கள், தேவையில்லாமல் குறை கூற வேண்டாம், அப்புறம் நாங்கள் அகிலாவின்
சொத்து குறித்து பேசவேண்டியிருக்கும்’’ என்று பாய்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இவர்களும்
தரிசு நிலம் என்பதற்கு ஆதாரம் காட்டுகிறார்கள். இவர்கள் இருவரும் யாரேனும் ஒருவர் சொல்வது
மட்டுமே உண்மையாக இருக்க முடியும். அந்த ஒருவர் யாருங்க?