News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாட்டுக்கு நிதி தரமுடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுத்துள்ளது. மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் மிரட்டுகிறார். உங்க அப்பன் வீட்டு காச கேக்கல. பிச்சை கேக்கல. கடன் கேட்கவில்லை. தமிழ்நாடு மாணவர்களின் பெற்றோர் கட்டிய வரிப்பணத்தைதான் கேட்கிறோம். உங்கள் மிரட்டலுக்கு தமிழ்நாடு அஞ்சாது.

தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காது. இங்கு இருமொழிக் கொள்கைதான். எங்களை மீண்டும் மீண்டும் மிரட்டி பார்க்க வேண்டாம். பிரதமர் மோடி அவர்களே நீங்கள் சென்ற முறை எங்களின் உரிமைகளை பறித்தபோது தமிழ்நாட்டு மக்கள் உங்களை கோ பேக் மோடி என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். இதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால் இந்தமுறை கோ பேக் மோடி கிடையாது. கெட் அவுட் மோடி என்று சொல்லி உங்களை விரட்டியடிப்பார்கள்” என்று ஆவேசம் காட்டினார்.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி சொல்கிறார். மோடி வந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்வாராம். உதயநிதிக்கு சொல்கிறேன். நீ சரியான ஆளா இருந்தா சொல்லி பாரு. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு. எங்க அப்பா முதலமைச்சர். என் தாத்தா 5 முறை முதலமைச்சர். நீ சொல்லிப் பாரு. உன் வாயில் இருந்து எங்க உலகத் தலைவர் மோடியை சொல்லி பாரு. உன் அப்பா சிட்டிங் முதலமைச்சர், நீ துணை முதலமைச்சர். சொல்லி பாரு.

இரண்டு நாட்களுக்கு முன்னாடி என்ன சொன்ன? கெட் அவுட் மோடின்னு சொல்வாராம். வெளிய போடா மோடின்னு சொல்வாராம். உனக்கு ஒரு உலகத்தலைவரை மதிக்கத் தெரியல. நீ கத்துக்குட்டி. காலைல 11 மணிக்குத்தான் உன் மேல் வெயிலே படும். நீ சூரியனை காலைல பார்த்ததே கிடையாது.

உச்சிக்கு வந்ததுக்கு அப்புறம்தான் பார்ப்ப. 3.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து யோக பண்ணிட்டு ஃபைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி பண்ற ஆளிடம் 11.30 மணிக்கு எழுந்திருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா சாதாரண நடுத்தர மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்’’ என்று ஒருமையில் பேசினார்.

இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் குதூகலம் காட்டி வந்த நிலையில், இன்ற் காலை முதலே மோடிக்கு எதிராக, ‘கெட் அவுட் மோடி’ ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்துவருகிறார்கள். ஆட்டுப் புழுக்கை சவாலுக்காக இல்லை, சும்மா ஜாலிக்காக டிரெண்டிங் செய்கிறோம் என்று மோடியை விதவிதமாக அவமானப்படுத்துகிறார்கள்.

சும்மா இருந்த தி.மு.க.வினரை உசுப்பிவிட்டு மோடியை அவமானப்படுத்துவதே அண்ணாமலைக்கு வாடிக்கையாகி விட்டது என்று பா.ஜ.க.வினரே தலையில் அடித்துக்கொள்கிறார்கள். அண்ணாமலையை இப்படி ஜோக்கர் ஆக்கிட்டாங்களே..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link