Share via:
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவையொட்டி
ஆறு வாரங்களுக்கு, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (வேத, புராணங்களில் கூறப்படும் நதி,
பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது) ஆகிய புனித நதிகளில் நீராடுவதற்கு இந்தியாவில்
இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சேர்கிறார்கள். இந்த நாட்களில் கும்பமேளாவின் போது
புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்குகிறது, ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது, பிறப்பு
மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைய உதவுகிறது என்று நம்பி கூட்டம் கூட்டமாக
வந்து குவிகிறார்கள்.
இந்த நிலையில், மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை
மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில்
‘Faecal Coliform’ என்ற பாக்டீரியா அதிகளவில் இருக்கிறது. ஆகவே, இங்கு மனிதர்கள் இந்த
இடங்கள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
வெளியிட்டுள்ளது.
இங்குள்ள ஆற்றின் நீரில் கலந்திருக்கும் ‘Faecal Coliform’ என்ற
பாக்டீரியா மனிதர்கள், விலங்குகளின் மலக்குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாவாகும்.
இந்த பாக்டீரியாவால் மோசமான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை செய்திருக்கிறது.
ஓடுகிற தண்ணீரில் குளித்தால் பாவம் போய்விடும் என்று நம்பி நோயைக்
கூட்டிட்டு வந்துடாதீங்க மக்களே.