Share via:

கெட் அவுட் மோடி ஹேஷ்டேக் டிரெண்டிங்கிற்கு எதிர்வினையாக கெட்
அவுட் ஸ்டாலினை டிரெண்டிங் செய்வோம் என்று அண்ணாமலை சொன்னபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு
தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) பதிவு
செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த விவகாரத்தில் சீமான் கட்சியினரும் இடையில்
புகுந்து கலாட்டா செய்ய, எல்லாவற்றையும் அ.தி.மு.க.வினர் வேதனையுடன் பார்த்துவருகிறார்கள்.
இது குறித்து பேசும் அ.தி.மு.க.வினர், ‘’நாட்டில் தினமும் ஒரு
கொலை, கொள்ளை என்று சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க.வினர்
தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துவருகிறார்.
இந்த நிலையில் பா.ஜ.க.வினரும் தி.மு.க.வினரும் சேர்ந்துகொண்டு டிரெண்டிங் என்ற பெயரில்
மக்களை பிரச்னைகளில் இருந்து திசை திருப்பும் நாடகம் போடுகிறார்கள்…’’ என்று வேதனைப்படுகிறார்.
இவர்களுக்கு நடுவில் சீமான் கட்சியினரும் களத்தில் இறங்கி கெட்
அவுட் மோடி அண்ட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கைப் போட்டு நாங்களும் களத்தில் இருக்கிறோம்
என்று காட்டி வருகிறார்கள்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’பா.ஜ.க.வின் பி டீம் என்பதை அவ்வப்போது
சீமான் நிரூபித்துவருகிறார். தமிழகத்துக்குச் சேர வேண்டிய நிதியை முதலில் தந்துவிடுங்கள்
Get Out மோடினு சொல்ல வெச்சுராதீங்கனு துணை முதலமைச்சர் மேடையில் பேசுனதுக்கு டிரிகர்
ஆகி, அண்ணாமலை எனும் சைக்கோ வெளிய போடா மோடினு சொல்லிப்பாருனு சவால் விட்டான். இதற்குப்
பிறகுதான் ஆன்லைன் எதிர்வினையாக #GetOutModi trend
ஆகிறது.
மிளகாயைக் கடித்த குரங்கு போல் அண்ணாமலை அதற்கு எதிர் டிரெண்ட்
செய்கிறேன். என் வடக்கு சொந்தங்களை தயார் செய்ய ஒரு நாள் தேவைப்படும்னு அவன் இன்னைக்கு
டிரெண்ட் பண்ணிட்டிருக்கான். சங்கி அடிமை எச்சைகளுக்கு அண்ணாமலையின் கோமாளித்தனத்தை
சுட்டிக்காட்ட தைரியமில்லாமல், hashtag சண்டை போடுகிறார்கள்னு பாஜகவோட திமுகவையும்
சேர்த்து திசை திருப்புகிறார்கள்’’ என்கிறார்கள்.
மக்களுக்கு எந்த வகையிலும் உருப்படாத விஷயங்களுக்கு ஆளும் கட்சிகள்
மோதிக்கொள்வதைப் பார்ப்பது மக்களுக்குத் தலையெழுத்து