Share via:

எடப்பாடி பழனிசாமியின் ஆளாக நின்று தேர்தலில் தோற்றுப் போனவர்
முன்னாள் பத்திரிகையாளரான மருது அழகுராஜ். பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றி என் வீட்டை
விற்பனை செய்ய வைத்து என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம்
பக்கம் பாய்ந்தார். இவர் அதிகாரபூர்வமாக விஜய் கட்சியில் சேர்வதற்கு துட்டு எதிர்பார்க்கிறாராம்.
பன்னீர் அணியில் சேர்ந்ததும் இவருக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கப்பட்டது.
ஆனால், அந்த பத்திரிகையை நடத்தவும் மருது அழகுராஜால் முடியவில்லை. அவரது செலவுக்குப்
பணம் கொடுத்து பன்னீருக்கு கட்டுப்படியாகவில்லை. அதனால், அவரை விரட்டிவிட்டார்.
இந்த நிலையில் இப்போது ஒரேயடியாக தொடர்ந்து விஜய்க்கு ஜால்ரா போட்டு
வருகிறார். விஜய் பற்றி மருது அழகுராஜ், ‘’தனது ஒரே ஒரு அழைப்பால் சுமார் பத்துலட்சம்
பேரை திரட்டிக் காட்டியவர் மக்களைச் சந்திக்க நேரில் செல்லும் போது ஸ்டாலின் எடப்பாடி
அண்ணாமலை இவர்கள் எல்லோரையும் விட தவெக தலைவர் விஜய்க்கு தன்னெழுச்சியாக பெருமளவில்
மக்கள் திரள்வார்கள். விரைவில் ஆட்சியைப் பிடிப்பார்’’ என்றெல்லாம் தொடர்ந்து ஜால்ரா
பதிவுகள் போட்டு வருகிறார்.
விஜய் கட்சியில் சேர்வதற்கு மருது அழகுராஜ் தயாராக இருக்கிறார்
என்றதும் பேச்சுவார்த்தை நடந்ததாம். என்ன பதவிங்கிறது எனக்கு முக்கியமே இல்லை. ஆஆ,
என் கடனை மட்டும் அடைச்சிடுங்க என்று ஒரு பெரிய பில் நீட்டியிருக்கிறார். இத்தனை பெரிய
தொகையை எதிர்பார்க்காத காரணத்தால் விஜய் கட்சியில் சேர்வது தள்ளிப் போகிறதாம். உள்ளே
நுழையும் முன்னரே பணத்தை வாங்குறது தான் புத்திசாலித்தனம்.
என்ன நாஞ் சொல்றது…