News

விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை

Follow Us

ஈரோட்டில் வந்து பெரியாரை விமர்சனம் செய்து பார் என்று சவால் விட்ட திராவிட ஆதரவாளர்களை, அங்கேயே போய் நின்று பெரியார் என்பது போலி பிம்பம் என்பதை உடைத்துக் காட்டி, அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் சீமான்.

நடந்துமுடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்குகள் எல்லாம் சீமானுக்குக் கிடைத்திருக்கின்றன என்று இப்போது திராவிட ஆதரவாளர்கள் ஒரு கருத்தை உருவாக்கிவருகிறார்கள். உண்மையில் இந்த தேர்தலில் தி.மு.க.வை விட சீமானுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது என்பதே உண்மையான கணக்கு.
ஏனென்றால் கடந்த தேர்தலில் நின்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1, 10, 156 வாக்குகள் வாங்கியிருந்தார். இந்த முறை கூடுதலாக நான்காயிரம் வாக்குகள் மட்டுமே தி.மு.க. வாங்கியிருக்கிறது. அதேநேரம், நாம் தமிழர் இயக்கம் கடந்த தேர்தலை விட 14 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறது. ஈரோட்டு மண்ணில் பெரியாரை எதிர்த்துப் பேசியே இந்த கூடுதல் வாக்குகளை சீமான் பெற்றிருக்கிறார். ஆளும் கட்சியின் அராஜம், பணநாயகத்தை மீறி இத்தனை வாக்குகள் பெற்றிருக்கிறார்.
பெரியார் மண் என்றால் இங்கே வாக்குகள் குறைந்திருக்க வேண்டும், ஆனால் இங்கேயே அதிகரித்திருக்கிறது என்றால் பெரியார் பிம்பம் உடைகிறது என்றே அர்த்தம். அதோடு, பெரியாரை எதிர்த்து இன்னமும் ஆக்ரோஷமாகப் போராடுகிறார். பெரியார் ஆதரவாளர்கள் என்னுடைய கட்சிக்குத் தேவையில்லை என்றும் உறுதிபடத் தெரிவிக்கிறார். பெரியாருக்கு இப்போது தான் சரியான போட்டியாளர் கிடைத்திருக்கிறார் என்று நாம் தமிழர் தம்பிகள் ஆனந்தப்படுகிறார்கள். அதேநேரம் திராவிடக் கட்சியினர், ‘பிரபாகரனை வைத்து இனி காலம் தள்ளமுடியாது என்பதால் பெரியாருக்கு மாறியிருக்கிறார் சீமான்’ என்று கிண்டல் செய்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link