News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அண்ணா தி.மு.க. தொடங்கிவைத்த, ‘யார் அந்த சார்?’ என்ற விவகாரத்தை திசை திருப்பும் வகையில் பத்திரிகையாளர்களிடம் செல்போனை வாங்கிவைத்து, தொடர் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை நெருக்கடி கொடுத்தது. இந்த நெருக்கடிக்குப் பணியாமல் நீதிமன்றத்தில் போராடிய பத்திரிகையாளர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம், பத்திரிகையாளர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர்களான பத்திரிகையாளர்களை தொடர்ச்சியாக விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியதே, ஒரு வகையில் துன்புறுத்தல் தான் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அந்த தீர்ப்பில், ‘கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எழுதிய முதல் தகவல் அறிக்கையை, காவல்துறையினர் தான் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் தகவல் அறிக்கை இணைய தளத்தில் பதிவேற்றமாகி விட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் என நீதிபதி தனது  உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து முதல் தகவல் அறிக்கையை இணைணயதளத்தில் பதிவேற்றம் செய்தது காவல்துறையினர் தான். அதன்பின் அதனை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, பதிவேற்றம் செய்ததில் பத்திரிகையாளர்களுக்கு எந்த பங்கும் இல்லை எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் மனுதாரர்கள் செய்தி வெளியிட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை மேற்கொள்ளலாம் எனவும், அந்த விசாரணை சட்டப்படி இருக்கவேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதி, விசாரணையின் போது தனிப்பட்ட விவரங்களைக் கேட்க எந்த சட்டப்பிரிவும் அனுமதிக்கவில்லை எனவும் அவ்வாறு விவரங்களைக் கேட்பது, தனிப்பட்ட சுதந்திரத்துக்கு விரோதமானது’’ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ‘’விசாரணை என்ற பெயரில் மனுதாரர்களின் மொபைல்களை பறிமுதல் செய்து, தனிப்பட்ட விவரங்களை, ரகசிய தகவல்களை வழங்கக் கூறுவது பத்திரிகைகள் மீதான தாக்குதலே தவிர வேறொன்றும் இல்லை எனவும், அவர்களின் மொபைல்களை பறிமுதல் செய்திருக்க கூடாது எனவும் தெரிவித்த நீதிபதி, இது பிரஸ் கவுன்சில் சட்ட விதிகளுக்கு விரோதமானது.  

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை எழுதிய காவல்துறை அதிகாரியையோ, இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்களையோ சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்யவில்லை. அவர்களுக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. கேள்விகள் கேட்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் ஆகி விட்டதாகக் கூறுவது துரதிருஷ்டவசமானது.

காவல்துறை இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டவர்களை விசாரிக்காமல், முதல் தகவல் அறிக்கையை எழுதியவரை விசாரிக்காமல், மனுதாரர்களை விசாரித்துள்ளனர். முதல் தகவல்அறிக்கையை எழுதியவரின் ஒப்புதல் இல்லாமல், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாது.

பாலியல் குற்றங்கள், பயங்கரவாத குற்றங்கள், போக்சோ குற்றங்கள் போன்ற தீவிரமான வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது. பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதால் முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. புலன் விசாரணைக்காக மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும், அவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது’’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், மனுதாரர்களிடம் பிப்ரவரி 10 ம்தேதிக்குள் விசாரணையை முடிக்கவேண்டும் எனவும், அவர்களிடம் பறிமுதல் செய்த மொபைல்களை உடனடியாக திரும்ப கொடுக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்கள் குறித்து விசாரிக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.

பத்திரிகை சுதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி இது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link