Share via:
கடந்த வாரம் சாம்சங்
இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இதை தொழிலாளர்களும் பின்னிருந்த கம்யூனிஸ்ட்
இயக்கங்களும் அட்டகாசமாக கொண்டாடின. தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி
என்று அறிவித்தார்கள். இந்நிலையில் மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் இன்று உள்ளிருப்புப்
போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
சாம்சங் நிர்வாகத்தின்
அராஜகம் தொடர்வதால் இன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அராஜகத்தை திமுக அரசு வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்று கொதித்துள்ளனர்.
தொழிற்சங்கம் அமைத்தற்காக சங்க நிர்வாகிகள் மூன்று
பேரை சாம்சங் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருப்பதும், வலுக்கட்டாயமாக 400க்கும்
மேற்பட்ட தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத்தில் இருந்து விலகுவதாக கையெழுத்து வாங்கியுள்ளது
பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலை ஆலைக்குள்
உள்ளிருப்பு போராட்டத்தை இன்று தொழிலாளர்கள் துவங்கியுள்ளனர். தொழிலாளர்களை இயற்கை
உபாதைகள் கூட கழிக்க விடக்கூடாது என ஆலைக்குள் கழிப்பிட கதவுகள் மூடப்பட்டுள்ளது. இது
அப்பட்டமான மனித உரிமை மீறல். திமுக அரசு இந்துத்துவா அமைப்புகளின் வளர்ச்சியை வேடிக்கை
பார்க்கிறது. கார்ப்பரேட்டுகள் தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதையும் மனித உரிமை மீறல்களையும்
வேடிக்கை பார்க்கிறது என்று குரல் எழுப்புகிறார்கள்.
சட்டுப்புட்டுன்னு வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவாங்க… மீண்டும் மீண்டும் போராட்டம் என்பது பெரும் சிக்கலாகிவிடும்