Share via:
செய்தியாளர்கள் சந்திப்பில்
சீமான் அவ்வப்போது வில்லங்க வார்த்தைகள் பேசுவதுண்டு. அப்படி இன்று, ‘மண்டையை உடைச்சுடுவேன்’
என்று எகிறினார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்
இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்,
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது.
கடந்த 2019ம் ஆண்டு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்
செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்
காந்தியை இன துரோகி, தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில்
காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட
வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை
விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த
நீதிபதி வேல்முருகன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின்
வாக்குமூலங்களில் இருந்து, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம்
உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த
ஆதாரங்களும் இல்லை எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு சீமான்
தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துக்களை
சீமான் பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்க சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
ஒவ்வொரு நாளும் ஒரு
வழக்கு பதிவு செய்யப்படுகிறது நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது என்று வாதிட்ட வழக்கறிஞரிடம்,
‘தினசரி சீமான் யாரையாவது திட்டிக்கொண்டு அவதூறு பரப்பிக் கொண்டு தூண்டிவிட்டுக் கொண்டே
இருக்கிறார். சமுதாயத்தில் பதட்டம் ஏற்படுத்துகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரிய
செயல். நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளாது. இதுவரை நீதிமன்றம் தானாக வந்து இந்த விஷயத்தை
கையில் எடுக்கவில்லை. கையில் எடுக்க வைத்து விடாதீர்கள். அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில்
இருந்து விலக்களிக்க முடியாது. குறைந்த பட்சம் அவர் நான்கு நீதிமன்றம் ஏறி இறங்கினால்
தான் அவருக்கு வாய் கட்டுப்படுத்த இயலும். தற்பொழுது நிதானமற்ற மனிதராக இருக்கிறார்.
நீதிமன்றம் செல்லட்டும் என்னால் விலக்களிக்க முடியாது. போகிற போக்கில் நிதானம் இல்லாமல்
எதையோ பேசிக் கொண்டே இருக்கிறார்’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு
காலத்தில் வாடகை வீட்டுக்கே வழி இல்லாத சீமானுக்கு எக்கச்சக்க சொத்துக்கள் குவிந்துவிட்டன
என்று உடன்பிறப்புகள் ஒரு பட்டியலை சமூகவலைதளத்தில் பரப்பிவருகிறார்கள்.
அந்த பட்டியல் படி
சீமானுக்கு 1.நெல்லை கோலா பாக்டரியில்
7%ஷேர். 2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில்
மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம். 4.பூந்தமல்லி
தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர்
நிலம். 5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
6. பங்களூரில்
4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள். 7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி
ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான்
தம்பி. 8. இலங்கை பவர் பிளான்ட்
தொழில். 9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு
மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில்
80 ஏக்கர் நிலம். 11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம். 12.மதுரை பைபாஸிசில்
தென்னந்தோப்பு. 13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும்
ஸ்பெசல் கவனிப்பு. 14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில்
ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 15.பழனி அருகே தென்னந்தோப்பு. 16.ஊட்டியில் எஸ்டேட்
தொழில். இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை நடக்கிறது என்று கூறி வருகிறார்.
இதற்கு நாம் தமிழர்
கட்சியினர் இன்னமும் பதில் சொல்லாமல் அமைதி காப்பது தான் ஆச்சர்யம்.