Share via:
தமிழ்நாடு அரசு நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவது போல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் வரயிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கணக்கிட்டே இந்த மாற்றம் நடந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதே பாணியில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் நடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. உதயநிதிக்கு ஆதரவாக இந்த மாற்றம் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த வகையில் ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது.
1. தர்மபுரி மாவட்ட ஆட்சியராக ஆர்.சதீஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ்.சரவணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி.தினேஷ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக எஸ்.ஷேக் முகமது ரகுமான் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கே.தற்பகராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வி.மோகன சுந்தரம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஆர்.சுகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே.சவுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர சிதம்பரம் துணை ஆட்சியராக கிஷண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை செயலராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதியின் செயலாளராக பதவி வகித்து வரும் இவருக்கு கூடுதல் பொறுப்பாக இத்துறை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக பழனி நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக லலித் ஆதித்யா நீலம் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நல ஆணையராக ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் பொதுத் துறை இணை ஆணையராக சரயு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் இணைய தலைமை செயல் அலுவலர் ஸ்ருதன்ஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசன்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்டிசி மேலாண் இயக்குநராக பிரபு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் மற்றும் செயலாளராக தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரி இணை ஆணையராக பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத் திட்ட இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் வழிகாட்டி பிரிவு நிர்வாக இயக்குநராக தாரேல் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையராக தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையராக ஜெயா நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்புச் செயலராக கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தது ஐ.பி.எஸ். மாற்றம் எப்போது என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.