Share via:
தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் சமூகநீதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் பேசி நிர்மலா
சீதாராமனை கடுமையாக சாடியிருக்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
நாடாளுமன்றத்தில் நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘பட்ஜெட்
அல்வா‘ தயாரிப்பு படத்தைக் காட்டி பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பட்ஜெட் தயாரிப்பதில் 20 அதிகாரிகள்
பணியாற்றினர். அவர்களில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருவர்
ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள். பட்ஜெட்
அல்வாவில் நாட்டின் 73% மக்களுக்கு இடம் இல்லை” என்று ராகுல் காந்தி ஆவேசமாகப்
பேசியதைக் கேட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு கேவலமான சிரிப்புடன் தலையில் அடித்துக்கொண்டார்.
உடனே ராகுல் காந்தி, “நிதி
அமைச்சர் சிரிக்கிறார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது சிரிக்கும் விஷயம்
அல்ல மேடம். நாட்டின் அணைத்து பிரிவினருக்கும் சமூக நீதி சென்றுசேரவில்லை என்பதை
உணர்த்தும் படம் இது. சமூக நீதியை சாதிக்க நம் நாட்டுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு
அவசியம் என்பதை உணர்த்தும் ஒரு படம் இது.” என்று சாட்டையடி பதில் கொடுத்தார்.
பட்ஜெட் வருவதற்கு முன்பே அது எப்படி இருக்கும்
யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை ரோடு போட்டுக் காட்டிவிட்டார் ராகுல்காந்தி.