Share via:
இந்தியர்களை கை,
கால்களில் விலங்கு போட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பிய விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில்
வெடித்தது. அமெரிக்காவிலிருந்து கை விலங்கிட்டு அழைத்து வரப்பட்டவர்கள் கைதிகள் அல்ல
மனிதர்கள் என களத்தில் இறங்கி மோடி அரசுக்கும் டிரம்ப அரசுக்கும் எதிராக ராகுல் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
அமெரிக்காவில் போதிய
ஆவணங்கள் இல்லை என 104 இந்தியர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு சர்வதேச குற்றவாளிகளை
கடத்துவது போல இந்தியாவிற்கு ராணுவவிமாஙஅனுப்பியுள்ளது அமெரிக்கா. சாப்பிடும் போது
கூட கைவிலங்கை கழட்டி விடாமல் இந்தியர்களின் அடிப்படை மனித உரிமையை அமெரிக்கா மீறியுள்ளது.
இவை எதற்கும் மோடி அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
கொலம்பியா கூட அமெரிக்க
விமானத்தை எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என எதிர்த்து குரல் எழுப்பிய பிறகு
அந்நாட்டு மக்களை பயணிகள் விமானத்தில் அனுப்பியது அமெரிக்க அரசு. இந்தியர்களை அமெரிக்கா
நடத்திய விதம் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைக்குனிவு ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சிகள்
கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டார்கள்.
இது சம்பந்தமாக வெளியுறவுத்துறை
அமைச்சர் உடனே விளக்கமளிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திற்குள்ளேயும் எம்.பி.க்கள்
போராடும் நிலையில் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஜெய்சங்கர். மோடி இனியாவது
வாயைத் திறப்பாரா அல்லது சீனா விவகாரம் போல் கப்சிப் என்று அமைதி காப்பாரா..?