Share via:
விடுதலைப்புலிகளின்
ஒரே நம்பிக்கை என்றே நாம் தமிழர் சீமானை தமிழக இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர்
பெரியாரை விமர்சனம் செய்யத் தொடங்கியதும் காட்சிகள் மாறின. பிரபாகரனுடன் சீமான் இருக்கும்
புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர்
சங்ககிரி ராஜ்குமார் ஒரு வெடிகுண்டு வீசினார்.
அடுத்ததாக பிரபாகரனின்
அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான்.
ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பு தான். இவர் சொல்வதுபோல், என் சித்தியுடன்
(பிரபாகரனின் மனைவி) பழகியதெல்லாம் கிடையாது. சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கெல்லாம்
வாய்ப்பே கிடையாது. சீமான் சொல்லும், ஆமைகறி, இட்லி கறி உள்ளிட்ட அனைத்தும் பொய். ஒரு
ஆவணப்படம் எடுப்பதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருந்தபோது தான் இவர் அங்கு சென்றார்.
அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ், அந்தக் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
சந்தோஷ் தற்போது கனடாவில் உள்ளார். அவர் வாயைத் திறந்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவர
வாய்ப்பு இருக்கிறது’’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒளிப்பதிவாளர்
சந்தோஷ் பிரத்யேகப் பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த பேட்டியில், ‘’வாழ்த்துகள் படம்
வெளியான சமயத்தில் தான் சீமான் அங்கு அழைக்கப்படுகிறார். இதற்கு முக்கிய காரணம் வன்னி
அரசு. அவர் பரிந்துரைத்தன் பேரில் இவர் அங்கு அழைக்கப்படுகிறார். அவருக்கும் ஈழத்தில்
எடுக்கப்பட்ட படத்திற்கும் சம்மதமே கிடையாது. சேரலாதன் மூலம் தான் பிரபாகரனுக்கு சீமான்
அறிமுகம். சீமான் வன்னி பகுதிக்கு வந்த பிறகும் கூட சீமான் யார் என்று பிரபாகரனுக்கு
தெரியாது.
சீமான் 2008-ம் ஆண்டு
பிப்ரவரி 9-ம் தேதி ஈழத்திற்கு வந்தார். அங்கிருந்து 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
23-ம் தேதி அங்கிருந்து திரும்பிவிட்டார். இவர் பிரபாகரனை சந்தித்தது பிப்ரவரி 13-ம்
தேதி. அதுவும் பிரபாகரனுக்கு இவரை அழைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. சீமான் ஆயுதங்களுடன்
இருக்கும் படங்கள் என் கேமராவில் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரம்
எல்லாம் என்னிடம் உள்ளது. அதிகபட்சமாக ஒரு 8 முதல் 9 நிமிடங்கள் வரை
பிரபாகரனை அவர் சந்தித்தார். தற்போது இருக்கும் படம் போலியானது. அதற்கான உண்மையான படம்
என்னிடம் உள்ளது.
ஈழத்தமிழர்களின்
விருந்தோம்பல் நாம் சொல்லமுடியாத அளவிற்கு இருக்கும். சீமான் சொல்லும் ஆமைக்கறி உட்பட
அனைத்தையும் அங்கு நான் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால், அது சீமானுக்கு பரிமாறப்படவில்லை.
எனக்குக் கொடுத்தது. இதனை அவர் அங்கு வந்திருந்தபோது சொல்லப்பட்டது. அதனை அவருக்கு
நடந்ததாக சொல்லிக்கொள்கிறார். அவருக்கு உடும்புக்கறி கொடுக்கப்பட்டது. அவரும் ஆமைக்கறி
வேண்டும் என்று கேட்டார். ஆனால், அந்த சமயத்தில் ஆமைக்கறி கிடைக்கவில்லை.
ஒருகட்டத்தில் சேரலாதன்
சீமானுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஏனென்றால், ஒருமுறை சேரலாதன் ஸ்கைப் மூலம் சீமானுடன்
பேச நினைத்தார். அதை சீமானிடம் சென்று நான் சொன்னபோது அங்கே விஜயலட்சுமியும் செய்தார்.
நான் விஜயலட்சுமி
போன பிறகு பேசுங்கள் என்றேன். இல்லை, அவர் (விஜயலட்சுமி) நம்ம பிள்ளை தான் என்று சொல்லி
பேசினார். ஒருபக்கம் சேரலாதன் போர் முனையில் பேசிக்கொண்டிருக்கும்போது இங்கே சீமான்
விஜயலட்சுமியுடன் இருந்தார். இந்த சம்பவத்தை நான் சேரலாதனிடம் சொன்ன பிறகு, சீமானை
திட்டிவிட்டு இனி அவனுடன் நான் பேச மாட்டேன் என்று வைத்துவிட்டார். அதன்பிறகு சேரலாதன்
பேசவேயில்லை.
அன்றை பேச்சில்,
ஈழத்தில் கடைசி கட்டத்தில் நடந்தவற்றை அனைத்தையும் விவரித்தார். சூசை இருக்கும் பழக்கங்களில்
ஒன்று ஒரு பேச்சை இரண்டு முறை தெரிவிப்பவர். அப்படி தான் அந்த ஆடியோவில் இரண்டு முறை
சீமான் பெயரை சொல்லியிருப்பார். சீமானை இரண்டு முறை சொல்ல காரணம், ஈழத்தின் கடைசி காலகட்டத்தில்,
சீமான் லைம்லைட்டில் இருந்தார். எழுச்சியாக பேசிக்கொண்டிருந்தார். அதனால் அவரையும்
சொன்னார். அதற்காக சீமானிடம் தான் அனைத்தையும் விட்டு சென்றதாக அர்த்தம் இல்லை. அந்த
ஆடியோவில் கொளத்தூர் மணி, பழ நெடுமாறன், வைகோ என அனைத்து பெயரையும் சொல்லியிருக்கிறார்.
சீமானுக்கு மட்டும் சொல்லவில்லை. எனவே, சீமான் தன்னை ஈழத்துக்கான நபராக காட்டிக்கொள்ள
முடியாது” என்று தெரிவித்தார். ஆனால், அவர் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் படு
சர்ச்சையாகியிருக்கும் நிலையில் இதற்கும் நாம் தமிழர்கள் கடுமையாக பதில் தாக்குதல்
கொடுக்கிறார்கள். ’’முதல்ல நடிகை
விஜயலட்சுமியை அனுப்புனானுங்க சீமானை வீழ்த்த முடியல!
அப்பறம் வீர லட்சுமியை அனுப்புனானுங்க
சீமானை வீழ்த்த முடியல! அப்பறம்
கம்யூனிஸ்ட் அனுப்புனானுங்க சீமானை வீழ்த்த முடியல!
அப்பறம் பெரியார்ஷ்ட அனுப்பினானுங்க சீமானை வீழ்த்த முடியல!
அப்பறம் சினிமா எடிட்டர் அனுப்புனானுங்க
சீமானை வீழ்த்த முடியல! அப்புறம்
பத்திரிகையாளர்கள் போர்வையில் இருக்கும் சில திமுக
ஊபிபை அனுப்பிச்சாங்க சீமானை வீழ்த்த முடியல!
தலைவர் அண்ணன் மகன் என்று
சொல்லி ஒருத்தனை கூட்டி வந்தானுங்க
அப்பவும் சீமானை சீமானை வீழ்த்த
முடியல! முன்னாள் போராளி மனைவின்னு
சொல்லி ஒருத்தவங்கள செட்டப் பண்ணி கூட்டி
வந்தானுங்க அப்பவும் சீமானை வீழ்த்த
த முடியல! இப்ப
சினிமா கேமராமேன் ஒருத்தன அனுப்பி
இருக்கானுங்க அப்பாவும் சீமானை வீழ்த்த
முடியாது’’ என்கிறார்கள்.