Share via:
நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாளை,
பிசிறு என்றும் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சீமான் பேசியதாக
ஓர் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவை உட்கட்சி விவகாரம் என்று சொன்னாரே தவிர, பொய்யான
ஆடியோ என்று மறுக்கவில்லை.
அதன் பிறகு சீமானும் காளியம்மாளும் பல இடங்களில் சந்தித்துக்கொண்டாலும்
இன்னமும் அவர்கள் உறவு சீராகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதோடு, பிரபாகரனை
சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் சீமான் என்று சீமானை மேடையில் வைத்துக்கொண்டே பேசி
சலசலப்பு ஏற்படுத்தினார் காளியம்மாள். இந்த மோதலில் காளியம்மாள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா
என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சீமான் வெளிப்படையாக காளியம்மாள்
மீது விமர்சனம் வைத்திருக்கிறார். அந்த பேட்டியில், ‘’காளியம்மாளை வளர்த்து விட்டது
நாங்கள்தான். சும்மா இருந்தவரை அடையாளம் காட்டியது கட்சி. அதற்குப் பிறகு கட்சி வளர்ந்திச்சான்னு
பார்த்தா இல்லை. அவங்கவங்க வளர்றாங்களே தவிர கட்சி வளரலை. நாலு அல்லக்கைகளை கூட்டிக்கிட்டு
நெஞ்சை நிமித்திக்கிட்டு நடந்தா போதுமா..?
கட்சி இன்னமும் வளராத நிலையில், எனக்கு கட்சி எதுவுமே செய்யலைன்னு
சொன்னா எப்படி..? இப்பவே இப்படின்னா பொதுச்செயலாளர் பதவி கொடுத்தா என்ன ஆட்டம் போடுவ…
முதல்ல கட்சியை வளர்க்கணும்’’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆடியோ விவகாரத்திற்கு இதுவரை காளியம்மாள் ஒரு இடத்திலும் ஆதங்கம்
தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லை. ஆனால், இப்போது நேரடியாகவே காளியம்மாள்
பொதுச்செயலாளர் பதவி கேட்கிறார் என்று குற்றம் சுமத்தியிருக்கிறார். காளியம்மாள் இன்னமும்
அமைதியாக இருப்பாரா..?