Share via:
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள
28 அணிகள் குறித்த பட்டியல் சமூகவலைதளத்தில் பரபரப்பாகிவருகிறது. இதில் மூன்றாம் பாலினத்தவர்,
காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
திருநர் அணியும் குழந்தைகள் அணியும் படு சர்ச்சையாகியுள்ளன.
திருநர் அணி என்பதை 9வது எண் பட்டியலில் சேர்த்து வேண்டுமென்றே
அவமானப்படுத்துகிறார் விஜய் என்று லிவிங் ஸ்மைல் வித்யா கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு விஜய் கட்சியினர் அவரை தி.மு.க.வை சேர்ந்தவர் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கல்வி கற்கும் வயதினரான இளம் பிஞ்சு நெஞ்சங்களில்
கேடுகெட்ட வன்மங்களை விதைதாது முட்டாளாக்கும் மோசமான சேயல் இது.சிறவர் சிறுமிகள் கையில்
காவிக் கொடி கொடுத்து கலவரத்துக்கு தயாராக்கும் இழிவான செயல். சிறுவர்களை அரசியலில்
ஈடுபடுத்த தடை உள்ளது விஜய்க்குத் தெரியாதா என்று திராவிடக் கட்சியினர் விமர்சனம் வைக்கிறார்கள்.
அரசியல் பிரச்சார மேடைகளில் குழந்தைகளை பேசவைப்பது, முழக்கமிட
வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபட வைக்க கூடாது என்று தேர்தல்
ஆணையம் உத்தரவு உள்ளது அப்படி இருக்க குழந்தைகள் அணி உருவாக்கியது எப்படி என்றும் கேள்வி
எழுப்புகிறார்கள். இந்த நிலையில் அண்ணாமலை, ‘விஜய்யே ஒரு குழந்தை, அதனால் விஜய் குழந்தை
அணியை உருவாக்கியிருக்கிறார்’ என்று கிண்டல் செய்திருக்கிறார். குழந்தைகள் அணி தலைவராகவும்
விஜய் டபுள் ஆக்ட் கொடுப்பார் என்று நையாண்டி செய்கிறார்கள்.
அதேநேரம் விஜய் கட்சியினர், ‘’குழந்தைகள் நல அணி என்பது குழந்தைகள்
நலன், குழந்தைகள் படிப்பு, ஆரோக்கியம், பாதுகாப்பு, முன்னேற்றம் சார்ந்த அணி. அதில்
கட்சியின் தோழர்கள் நிர்வாகிகளாக இருப்பார்கள், குழந்தைகள் அல்ல. இந்த அடிப்படை அறிவு
கூட இல்லாமல் உளறலாமா என்று அண்ணாமலையை போட்டுத் தாக்குகிறார்கள்.